பிசாசியல்-உடல் சார்ந்த மண்டலம் Connersville, Indiana, USA 53-0608A 1இப்போது நான்... (ஒலிநாடாவில் காலியிடம்). நான் ஊழியக்களத்தில் என்னுடைய கூட்டங்களில் இப்படி செய்வது, இதுவே முதல் முறையாகும். இது ஒரு புதிய நேரம். சகோ. பாக்ஸ்டர் போய்விட்டார், சகோ. பாஸ்வொர்த் அவர் இந்தியா அல்லது ஆப்ரிக்காவில் உள்ளார். சகோ. பாக்ஸ்டர் எங்கு உள்ளார் என்று எனக்குத் தெரியாது. அவர் எங்கோ சென்றுவிட்டார், மீதம் உள்ளவர்களும் வெளியில் எங்கேயோ சென்றுவிட்டனர். நானும், பில்லியும் இங்கு தனியாக உள்ளோம். எனவே, நாங்கள் சிறந்த நேரத்தைக் கொண்டுள்ளோம். எழுந்து, சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு... நாங்கள் அவ்விதமான உணர்வில் இருந்தோம். கர்த்தருடைய ஒத்தாசையைக் கொண்டு நாமாகவே கூட்டத்தை நடத்திக் கொள்ள ஏதுவாயிருக்கும். நான் மகிழ்ச்சியடைவதின் காரணம் அது சற்று இன்னும் அதிகமாக செல்வதைக் காண்பது தான். அதைச் செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா, அங்கே... என்னுடைய நிர்வாகத்தை நான் நேசிக்கிறேன். சில அருமையான சகோதரர்களை நான் கொண்டிருக்கிறேன்: பாஸ்வர்த், பாக்ஸ்டர், லிண்ட்சே, மூர், ஆக ஐந்து பேர் உள்ளனர். பேரன் வான் புளும் பாக் அவர்கள் அருமையான மனிதர். ஆனால் அதைக் குறித்த ஒன்று உள்ளது, ஒரு குழு மனிதரை ஒன்றாக நீங்கள் கொண்டிருக்கையில், ஒருவர் ஒரு காரியத்தை கொண்டிருப்பார், ஒருவர் வேறொன்றைக் கொண்டிருப்பார். சில சமயங்களில் நான் நினைப்பதற்கு முரண்பாடாக அது இருக்கும். இப்பொழுது சுதந்தரமாக இருப்பது போல நான் - நான் - நான் உணருகிறேன். ஆகவே நாம் ஒரு மகத்தான சமயத்தைக் கொண்டிருக்க ஏதுவாக இருக்கும். நம்முடைய கைப் பட்டையை சுருட்டிக் கொண்டு அப்படியே உள்ளே பாய்ந்து சாப்பிடலாம். உங்களுடை கைப் பட்டைகளை சுருட்டி விட்டுக் கொண்டு ஒரு மகத்தான சமயத்தை கொண்டிருத்தல் அதைக் குறித்து நான் - நான் சிந்திக்கிறேன்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) என்னுடைய முதல் வேதாகமம் இயற்கை ஆகும். இயற்கையின் மூலமாக தேவனை நான் கற்றுக் கொண்டேன். என்னால் மீன் பிடிக்க முடியும். என்னே, மீன் பிடிக்க எனக்கு விருப்பம். சன்னி பையனே, உனக்கு மீன் பிடிக்க விருப்பமா? நீ மீன் பிடிக்க விரும்பி, உன்னுடைய தாயாரை நேசிப்பாயானால், நீ ஒரு நல்ல பையனாக ஆவாய். என்னுடைய மனமாற்றமும் கூட என்னிடமிருந்து அந்த எல்லாவற்றையும் எடுத்துப் போடவில்லை. ஆகவே ஒரு நாள் நான் மலைகளின் மேல் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆகவே இது சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்ற சிறிய பிள்ளைகளுக்கும் கூட. ஆகவே, ஓ, அது வசந்த காலத்தில் அற்புதமானதாக இருக்கும். அந்த விதமாகவே செய்து கொண்டிருப்பேன். அடுத்த குழியில் ஒரு நன்னீர் மீன் வகை இருந்தது, உங்களுக்குத் தெரியுமா, அந்த விதமாக, கர்த்தரை ஸ்தோத்தரித்துக் கொண்டு மகத்தான சமயத்தினைக் கொண்டிருந்தேன், சில சமயங்களில் கூச்சலிடுவேன், என்னுடைய தூண்டிலை போடுவேன். கூச்சலிடுவதில் எனக்கு விசுவாசம் உண்டு. ஆமென், நிச்சயமாக, ஏனெனில் ஏதோ ஒன்று என்னை ஆட்கொள்கிறது, பிறகு... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) 2அங்கே மேலே அந்த இடத்தில் நியூ ஹாம்ப்ஷையரில் நிறைய கரடிகள் இருக்கின்றன. அங்கே நான் மீன் பிடிக்கின்ற இடத்தில் ஒரு சிறு கூடாரத்தைக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு சிறிய கூடாரத்தை அமைத்திருந்தேன் - நான் தங்குகின்ற ஒரு சிறிய கூடாரம். அங்கே இருந்தவைகளில் கறுப்பு கரடி மிகவும் குறும்பு வாய்ந்ததாக இருந்தது. ஆகவே ஒரு வயதான தாய்கரடி மற்றும் இரண்டு சிறு குட்டிகள் அங்கே உள்ளே சென்று, என் கூடாரத்திற்கு சேதத்தை விளைவித்தது. அந்த கரடிக்கு நான் என்ன செய்திருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்கள், அங்கே சிவப்பு மயிரைக் கொண்டிருந்த அந்த சிறிய பெண் கரடி? உண்மையாகவே அதை நான் துரத்த ஆரம்பித்திருக்க வேண்டும், அப்படித்தானே? 3ஆனால் அது இதைத்தான் செய்தது. அது உள்ளே வந்து; என்னுடைய கூடாரத்தை கிழித்துப் போட்டு, எல்லாவற்றையும் சிதறடித்து, நான் அங்கே வைத்திருந்த எல்லா உணவையும் சாப்பிட்டது, அது மிக அருமையாக இதைச் செய்தது. ஆகவே நான் மேலே வந்த போது, அது சென்றுவிட்டது. அது தன் குட்டிகளை நோக்கி கூச்சலிட்டது, அதனுடன் ஒரு சிறிய குட்டி ஓடினது. மற்றொன்று ஓடவில்லை; அது அப்படியே உட்கார்ந்து கொண்டது. அது தன் முதுகை எனக்கு நேராகத் திருப்பி, இதைப் போன்று, ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தது. நான் மூப்பர்களுடன் வெட்ட உபயோகித்துக் கொண்டிருந்த ஒரு பழைய கைக் கோடாரியைத் தவிர அங்கே வேறு எதுவும் என் கையில் இல்லை. நல்லது, அது சிறிது தூரம் ஓடி, ஓ, நான் ஊகிக்கிறேன் இங்கே உள்ள அந்த தொலைபேசி கம்பம் வரையுள்ள தூரம், பிறகு கீழே உட்கார்ந்து கொண்டது. அது இந்த கரடி குட்டியை நோக்கி கூச்சலிட்டு அழைத்தது, இதுவோ அதற்கு கவனத்தை அளிக்கவேயில்லை. அது அப்படியே அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தது. 4இது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று நான் எண்ணினேன். நான் சிறிது அருகில் நடந்து சென்றேன். மிக அருகில் செல்ல நான் பயந்தேன், பீறிப் போடும் என்று பயம். ஆதலால் - ஆதலால் நான் நான் ஒரு மரத்தை என்னால் காண முடியவில்லை, அதற்கு மரம் ஏறத் தெரியும் என்று நான் அறிவேன், ஆகவே... ஆகவே... அதற்கு மிக அருகாமையில் செல்ல நான் பயந்தேன், ஏனெனில் கரடியின் சுபாவம் என்ன என்று எனக்குத் தெரியும். ஆகவே சிறிது அருகே நான் சென்றேன். ஆகவே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? 5இப்பொழுது, பணியாரம் எனக்குப் பிடிக்கும். பையன்களாகிய உங்களில் எத்தனைப் பேருக்கு பணியாரம் என்றால் விருப்பம்? ஓ, பையனே, ஓ, எல்லா பையன்களுக்கும் கூட, அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்துவதை என்னால் காணமுடிகின்றது. நம் எல்லாருக்கும் பணியாரங்கள் என்றால் விருப்பம், அது எனக்கு மிகவும் பிடிக்கும், அவைகளின் மேல் தேன் ஊற்ற எனக்கு விருப்பம். ஒரு பாப்டிஸ்டு (Baptist) என்ற முறையில், நீங்கள் அறிவீர்கள், அது நம்மை தெம்போடிருக்கச் செய்கின்றது, உங்களுக்குத் தெரியும், தேன், உங்களுக்குத் தெரியும். ஆகவே கவனியுங்கள்; நான் அவைகளின் மேல் தெளிப்பதில்லை; உண்மையாகவே அதற்கு நான் ஞானஸ்நானம் (baptize) கொடுக்கிறேன். அது மிக அருமையாக கனமாக இருக்கையில் நான் அதன் மீது அதிகமாக ஊற்றுவேன். இங்கும் அங்குமாக சிறிது நான் தெளிப்பதில்லை. அதன் மீது அப்படியே ஊற்றுவேன், அவை முழுவதுமாக தேனால் நிரப்புவேன். 6ஆகவே பிறகு, உங்களுக்குத் தெரியுமா, அங்கே ஒரு வாளி நிறைய தேனை எடுத்து வைத்திருந்தேன், வாளியில் அரை காலன் தேன். ஆகவே கரடிகளுக்கு தேன் என்றால் மிகவும் பிடிக்கும். ஆதலால் இச்சிறு கரடி அங்கே சென்று அந்த தேன் இருந்த வாளியின் மேல் மூடியை எடுத்துபோட்டு, இந்த விதமாக உட்கார்ந்து கொண்டு, தேன் நிறைந்த அந்த சிறு வாளியை இதைப் போன்று தன்னுடைய புயத்தின் கீழ் வைத்துக் கொண்டது. அது அந்த... நீங்கள் சாப்பிடும் விதமாக அதற்கு தெரியவில்லை, உங்களுக்கு தெரியும், ஆகவே அது தன்னுடைய சிறிய நகமுள்ள பாதத்தை உள்ளே விட்டு இதைப் போன்று நக்கினது, அதை நக்கினது. அது என்னை நோக்கிப் பார்க்க திரும்பினது, அதனுடைய சிறிய வயதான கண்கள் ஒன்று சேர்ந்து மங்கலாக காட்சியளித்தது, அதனுடைய சிறு வயிறு தேனால், மிகவும் வழவழப்பாக ஆகியிருந்தது. அது அங்கே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய கையை உள்ளே விட்டு எடுத்து தன்னால் முடிந்தவரை பிரயாசப்பட்டு தேனை நக்கிக் கொண்டிருந்தது. ஓ, என்னே, பழைய காலத்து பரிசுத்த ஆவி கூட்டத்தை குறித்து நான் சிந்தித்தேன், நாம் வாளியை திறந்து, அதனுள் நம்முடைய கையை தோய்த்து நக்குவது. அப்படியே செய்து கொண்டிருங்கள், உங்களுக்குத் தெரியும், அப்படியே நக்கிக் கொண்டிருத்தல். 7இருந்தாலும், அந்த வேடிக்கையான காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த சிறு கரடியானது தன்னால் முடிந்த வரை குடித்துவிட்டு, வாளியை கீழே போட்டு விட்டு அங்கேயிருந்து ஓடிவிட்டது, பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? தாய்க் கரடியும் அந்த மற்றொரு கரடியும் அந்தக் கரடியை நக்கத் துவங்கின, தேனை நக்கி எடுத்துக் கொண்டிருந்தது. ஆகவே நல்லது, நம்முடைய கூட்டமும் அந்த முறையின்படியே அமைந்திருக்கட்டும் என்று, நான் நம்புகிறேன், ஆகவே நாம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கலாம், தேவனுடைய வல்லமை நம் மீது விழுந்து கொண்டிருக்கும். அது சரி. 8சிறு பிள்ளைகள் இருப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதைப் போன்று உங்களுக்கு கூற எனக்கு விருப்பம். ஒருக்கால் நாளை மதியம் நமக்கு கூடுதல் நேரம் இருக்கும், ஆகவே நாம் சற்று அதிகம் பேசலாம். இப்பொழுது ஒன்றைக் குறித்து அப்பா அம்மாவிடம் பேச விரும்புகிறேன். பிசாசியல் என்பதின் பேரால் பேசப் போகிறோம். சங்கீதம்: 103: 1-3 வரை நாம் இந்த வசனங்களை வாசிப்போம். அநேகமாக ஒவ்வொரு ஊழியக்காரர், குருமார் அல்லது வேதத்தை வாசிப்பவர் இவைகளை மனப்பாடமாக அறிவர். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அது எல்லாம் என்பதை, ''அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்'', இப்பொழுது நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துவோமாக... 9இப்பொழுது, பரலோகப் பிதாவே, இங்கே இந்த மதிய வேளையில் இங்கேயிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இங்கே சுற்றிலும் அமர்ந்து கொண்டிருக்கிற இந்த சிறு பிள்ளைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்; நாளை என்று ஒன்று இருக்குமானால், இயேசு வர தாமதிப்பாரானால், இவர்கள் நாளைய மனிதரும் ஸ்திரீகளுமாக இருப்பர். ஆகவே இப்பொழுது, பிதாவே அப்பொழுது உம்முடைய வார்த்தையின் பேரிலும், நாங்கள் கொண்டிருக்கின்ற பெரிய விரோதியான சாத்தானைக் குறித்தும் நாங்கள் பேசுகையில் எங்களை ஆசீர்வதியும். தேவனே, நாங்கள் தாமே ஒரு போர் முனையை அமைக்க உதவிசெய்து அவனுடைய அசைவின் ஒவ்வொரு அங்குலத்தையும் இன்றிரவு எதிர்த்து நிற்கத் தக்கதாக, இங்கே தேவனுடைய வல்லமையால் ஒரு ஆயுதங்கள் கொண்ட பிரிவை நிறுத்தி கர்த்தாவே, அவனுக்கு எந்த ஒரு சட்டப் பிரகாரமான அதிகாரங்களும் கிடையாது என்பதை அவனுக்கு காண்பிக்கவும், அங்கே கல்வாரியில் எங்கள் சார்பாக கிறிஸ்து, அவர் மரித்தபோது, அவனை ஜெயித்து, அவனுடைய துரைத்தனங்களை நாசமாக்கி, சாத்தான் கொண்டிருந்த ஒவ்வொரு வல்லமையையும் எடுத்துவிட்டார் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆகவே, தேவனே, மக்களுக்கு, தாங்கள் சுகமளிக்கப்பட எப்படி அறிந்து கொள்வது என்றும் சாத்தானை எவ்விதமாக வீழ்த்துவது என்பதைக் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ள இப்பொழுது ஞானத்தையும் புரிந்து கொள்ளுதலையும் எங்களுக்கு அளியும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 10இப்பொழுது, சில நிமிடங்களுக்கு பிசாசியல் என்பதின் பேரில் நாம் பேசப் போகிறோம். நீங்கள் பிசாசுகளைக் குறித்து அதிகம் கேள்விப்படுகிறீர்கள். இப்பொழுது நாளை மதியம் ஒருக்கால் நாம் முடித்துவிடுவோம். இதன் பேரில் பிரசங்கம் செய்ய, எப்படியாயினும் இந்த வாரத்தின் இரண்டு நாட்கள் எனக்கு தேவையாயிருந்தது. சுமார்... அல்லது இதன் பேரில் பேச மதிய ஆராதனைகள் இரண்டு நாட்கள். 11இப்பொழுது, முதல் காரியமாக ஒரு தீய ஆவி (demon) என்றால் எப்படியிருக்கும். அநேக மக்கள் ஒரு தீய ஆவியைக் குறித்து பேசுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நல்லது இப்பொழுது, ஒரு ''தீய ஆவி, பிசாசு“ எல்லாம் ஒரே வார்த்தையிலிருந்து வருகின்றது, ஆங்கிலத்தில் அது ”tormentor“ ”வேதனைக்குட்படுத்துகிறவன்“ தீங்கிழைக்கும் ஒருவன் என்றிருக்கிறது. அவன், கூறு... இப்பொழுது, இன்றைக்கு அநேக மக்களுக்கு வேதாகமம், ''அதில் ஒன்றுமே இல்லை; அது பழைய காலத்தவருக்கு, மேலும் இன்னுமாக,'' தாத்தா பாட்டி வாசித்த ஏதோ ஒரு பழைய கறுப்பு புத்தகம் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று என்பதாக இருக்கிறது, ஆனால் அது தவறாகும். அது ஒவ்வொருவருக்கும். ஆகவே தீய ஆவிகள் நம்மை தொந்தரவு செய்கின்ற வேதனைக்குட்படுத்துகிறவைகள் ஆகும். 12இப்பொழுது, மனிதருடைய ஆத்துமாவுக்குள் வருகின்ற தீய ஆவிகள் இருக்கின்றன, அது என்னவெனில், சொல் நடையில், அது - அது எதற்குள்... நான் இதைக் கூறுகிறேன் அது, ஆத்துமாவிற்குள் வருகின்ற அந்த தீய ஆவி, ஆத்துமாவை வேதனைக்குட்படுத்துகின்ற ஒன்றாகும். அநேக சமயங்களில் ஒருக்கால் மன நோயால் பீடிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நபரை உங்களால் காணமுடியும். இப்பொழுது, அவர்கள் ஒரு மனந்திரும்பின நபராக, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவராக, ஆனால் இன்னுமாக முழுவதுமாக பித்து பிடித்தவர்களாக இருப்பர். பாருங்கள்? அது சரி; அதற்கும் ஆத்துமாவிற்கும் தொடர்பே கிடையாது. அது ஒரு வேதனைக்குட்படுத்துகிறவன் ஆகும். (பாருங்கள்?) அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்ற ஏதோ ஒன்று. 13இப்பொழுது, எல்லா வியாதிகளும், முதலாவதாக நாம் காண வேண்டியது என்னவென்றால் எல்லா வியாதிகளும் பிசாசிடமிருந்து தான் வந்தன. தேவன் வியாதிகளின் ஆக்கியோன் அல்ல. நீ தேவனுக்கு கீழ்ப்படியாத பொழுது மறுபடியுமாக தேவனுடைய வீட்டிற்கு கொண்டு வரும்படியாக, என் மேல் எந்த ஒரு வியாதியை வைக்க சில சமயங்களில் சாத்தானை தேவன் அனுமதிக்கிறார். ஆனால் வியாதி, அதின் துவக்கம் பிசாசிடமிருந்து வருகிறது. நம்முடைய பரலோகப் பிதாவாகிய தேவன் வியாதி மற்றும் மரணத்தின் ஆக்கியோனாக இருப்பார் என்று ஒரு மனிதன் நம்புவான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா. நல்லது, இல்லை. அவர் அவ்வாறில்லை, முன்பு அவ்வாறில்லை, எப்பொழுதுமே அவ்வாறு இருக்கமாட்டார். கீழ்ப்படியாமையால் தேவன் மரணத்தை அனுமதிக்கிறார். தேவன் மரணத்தை அனுமதிக்கிறார். ஒரு எழுத்தாளன் கூறின விதமாக, “மரணம் செய்யக் கூடியது என்னவென்றால், தேவன் அதை இலேசான சிறு ஒற்றைக் குதிரை வண்டியில் சேணம் பூட்டினார், அது நம்மை, ஒரு விசுவாசியை தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக இழுத்துச் செல்கிறது''. ஆனால் ''மரணம்'' என்கின்ற அந்த வார்த்தைக்கு ''வேறு பிரித்தல்” என்று அர்த்தமாகும். 14இயேசு, ''என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு'' என்று கூறினார். மேலும் அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார். நாம் ஒருவரோடொருவரின் சரீரங்களை நம்முடைய கல்லறைகளில் பரிசுத்தமில்லாதவர்கள் மேல் திரட்டிக் குவிக்கின்றோம். ஆனால், “அவன் என்றென்றும் மரியாமல் இருப்பான்''. 15இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் லாசருவைக் குறித்து பேசின போது, ''லாசரு நித்திரையாயிருக்கிறான்'' என்றார். அந்த சீஷர்கள், நம்மைப் போன்று மனிதர்கள், “ஓ, லாசரு நித்திரை செய்கிறான் என்றால் அவன் நலமாகயிருக்கிறான்'' என்று அவர்கள் கூறினர். ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவர் கூறினதாக அவர்கள் எண்ணினர். ஆனால் அவர் வந்து அவர்களிடம் அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே பேசினார்; அவர் “அவன் மரித்துப் போனான்'' என்றார், நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள். ஆனால், ''நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்; அவனை எழுப்பப் போகிறேன்'' என்றார். பாருங்கள், பாருங்கள்? நீங்கள்... “மரணம்'' என்றால் ”வேறுபிரிதல்“ என்று அர்த்தம். இப்பொழுது, உங்களில் ஒருவர், உங்கள் குடும்பத்தில் மரித்தாலோ அல்லது ஏதோ ஒன்றோ, அவர் மனமாறியிருப்பாரானால், அவர்கள் மரிக்கவேயில்லை. மனித விதியின் கருத்தின்படி அவர்கள் மரித்துவிட்டனர். ஆனால் அவர் நம்மிடமிருந்து வேறு பிரிக்கப்பட்டுள்ளனர் என்பது மாத்திரமே, ஆனால் அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கின்றனர். அவர்கள் மரிக்கவில்லை, அவர்களால் மரிக்க முடியாது. அவர்கள் மரித்துப் போவது என்பது கூடாத ஒரு காரியமாகும். இயேசு ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்'', என்று கூறினார். ஆதலால் அவனால் மரிக்க முடியாது. அழியாமை, நித்தியமாக இருக்கும். எதுவுமே அழிய முடியாது. அது அழிந்து போகாத ஜீவனாகும். அதை அவன் கொண்டிருக்கிறான். ஏனெனில் தேவன் அதை அவனுக்கு கொடுத்திருக்கின்றார். ஆகவே இப்பொழுது, அதை பெறத் தகுதி கொண்டிருக்க வேண்டும் என்றல்ல; அது - அது நிபந்தனை இல்லாதது, தேவன் அதை அவனுக்கு அளிக்கின்றார். 16தேவன் அழைக்கின்றார். தேவன் அழைத்தாலொழிய ஒரு மனிதனும் தேவனிடம் வர முடியாது, இயேசு கூறினார், “என் பிதா ஒருவனை அழைக்காவிட்டால் - அவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒரு மனிதனும் என்னிடத்தில் வரான்'' என்று அது சரியா? ஆகவே அதில் எல்லாவற்றிலும் தேவன் தான். ஒருக்கால் நாளை மதியம் அதின் பேரில் சற்று அதிகமாகப் பார்க்கலாம், ஏனெனில் நீங்கள் காணவேண்டி இந்த வியாதியைக் குறித்து நான் பேச விரும்புகிறேன். ஒரு காலத்தில் நாம் நம்முடைய கொள்ளுப் பாட்டனாருக்குள் துளிர்விட்டிருந்தோம். அது உங்களுக்குத் தெரியும். மருத்துவர் அதை அறிவார். நல்லது, வேதத்தை வாசிக்கிற உங்களுக்கும் கூட அது தெரியும். ஒரு ஜீவ அணுவாக ஆவதற்கு அந்த ஜீவ அணு உங்களுடைய பெரிய கொள்ளு பாட்டனாருக்குள் ஆரம்பித்து உங்கள் பாட்டனார் மூலமாக வெளி வந்து பிறகு உங்கள் தகப்பனுக்குள் வந்து, பிறகு நீங்கள் இப்பொழுது இங்கிருக்கத் தக்கதாக உங்கள் தாயாருக்குள் வந்தது. அது சரி. வேதாகமம் கூட அதை போதிக்கிறது. உங்களுக்கு தேவையென்றால் இதோ உங்களுக்கு அந்த வேத வசனம். லேவி அவனுடைய பெரிய - கொள்ளுப் பாட்டனாராயிருந்த ஆபிரகாமின் அரைகளில் இருந்த போது தசமபாகம் செலுத்தினான் என்று அது கூறுகின்றது என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரியா? ஆதலால், பாருங்கள், அந்த ஜீவ அணு அங்கேயே ஆரம்பிக்கின்றது. 17ஆனால் தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் சிருஷ்டித்தபோது உங்களுடைய ஆத்துமாக்கள் உலகத் தோற்றத்திற்கு முன்னர் உண்டாக்கப்பட்டது: மனிதனின் ஆவி; தம்முடைய சொந்த சாயலில் ஒரு மனிதன் அல்ல, ஆனால் மனிதனை தம்முடைய சொந்த சாயலில். பாருங்கள்? பூமியின் தூளிலிருந்து ஒரு மனிதனை அவர் கொண்டிராததற்கு முன்னரே அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார். இந்த மதிய வேளையில் நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும். இந்த காரியத்திற்குள்ளாக நாம் சென்று பார்த்து எப்படி தேவன்... இப்பொழுது அது கோட்டிற்கு நடுவே உள்ளது, ஆனால் நீங்கள் பார்ப்பீர்களானால், அது சரியாக அந்த கோடோடு வருகின்றது. பாருங்கள்? இங்கே பின்னால் துவக்கத்தில் தேவன், அவர் அங்கே என்ன செய்தார், எப்படி அவர் கீழே பூமிக்குள் வந்தார், பிறகு எப்படி அவர் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கினார். ஆகவே பிறகு தேவன் சுற்றிலும் திரும்பி மனிதனை மீட்கத் தக்கதாக மனிதனுடைய சாயலில் உருவானார். 18இப்பொழுது, தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கின போது, அவன் ஒரு ஆவி மனிதனாக இருந்தான். ஆகவே அது... அப்பொழுது நிலத்தை பண்படுத்த மனிதன் இல்லாதிருந்தான். பிறகு அவர் பூமியின் தூளிலிருந்து மனிதனை சிருஷ்டித்தார். இப்பொழுது, கடந்த நிகழ்ச்சிகளின் காலக்கிரம கணக்காளர்கள் (Chronologists) இன்னும் மற்றவர்கள், மற்றும் பழைய எலும்புகளை ஆராய்ந்து தேடி எடுக்கின்ற இந்த மக்கள், மற்றும் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கையுடையவர்கள்... நான் சரியான ஒரு பரிணாம வளர்ச்சியில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். மனிதன் தம்மிலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைகிறான், ஆனால் ஒரே ஒரு அணுவிலிருந்து எல்லாரும் வரவில்லை. இல்லை, ஐயா, ஏனென்றால் ஒரு - ஒரு பறவையானது தேவன் அதை ஒரு பறவையாக உண்டாக்கினதிலிருந்து பறவையாகவே இருந்து வருகிறது, ஒரு குரங்கும் குரங்காகவே இருந்து வருகின்றது; ஒரு மனிதனும் மனிதனாகவே இருக்கிறான்...?... அது சரி. 19இப்பொழுது, இங்கே சமீபத்தில் லூயிவில்லில் ஒரு மருத்துவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறினார், “ஏன் சங்கை பிரன்ஹாம்...”, ஆப்பிரிக்க பழங்குடி மக்களைக் குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன், எப்படி அவர்கள் சாப்பிடுகிறார்கள், எவ்விதம் அவர்கள்... ஓ, சகிக்க முடியாத காரியங்களில் சில நீங்கள் கண்டிருக்க முடியாது, எவ்விதமாக அவர்கள் சாப்பிடுகிறார்கள், கெட்டுப் போன தூய்மைக் கேடான காரியங்கள், புழுக்கள் மற்ற எல்லாமும் அதில் இருக்கும், அவற்றை அப்படியே எடுத்து உதறிவிட்டு அப்படியே சாப்பிடுவார்கள். அது அவனுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. பாருங்கள்? அவர்கள் கூறினர்... எதை வேண்டுமானாலும் குடிப்பார்கள், அது என்னவாயிருந்தாலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. அவர் ''ஆனால், சகோதரன் பிரன்ஹாம், அந்த மக்கள் மானிடர்களே அல்ல'' என்றார். நான் கூறினேன், ''ஆமாம் அவர்கள் மானிடர். அவர்கள் நிச்சயமாக மானிடரே,'' என்று. நான் ''மிருக இனத்தில் மனித வர்க்கத்திற்கு மிக அருகாமையில் இருப்பது மனித உருவைப் போல் இருக்கும் வாலில்லா ஆப்பிரிக்கக் குரங்கு வகையான, சிம்பன்சி (Chimpanzee) ஆகும். அந்த சிம்பன்சி குரங்கின் வாயிலிருந்து ஒரு மனித முணுமுணுப்பை பெற நான்காயிரம் வருடங்களாக நீங்கள் முயற்சி செய்தீர்கள், அதனால் அவ்விதமாகச் செய்ய முடியாது,'' என்றேன், நான் “ஏனெனில் அதனால் சிந்திக்க இயலாது. சிந்திக்கத் தக்கதாக எதுவுமே அதினிடம் கிடையாது,'' என்றேன். அது குதிரை அல்லது ஒரு நாய்க்கு அல்லது அதைப் போன்ற ஒன்றிற்கு உள்ள கண்ணின் உட்கோணத்திலுள்ள குருத்தெலும்பைக் கொண்டதாகும். ஓ, உங்களால் அதற்கு மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ளுதல் அல்லது சுருட்டு புகைபிடிக்க அல்லது சைக்கிளின் மேல் அமர்ந்து ஓட்டுதல் அல்லது குதிரை சவாரி செய்தல் அல்லது அதைப் போன்ற சிறிய காரியங்களை கற்றுத் தர முடியும்; ஆனால் அது குதிரைக்கு, குதிரை என்ற பேச்சு வகையும் (Ghee) மற்றும் நாய் அல்லது மற்றவற்றைப் போன்ற ஒன்றாகும்,'' என்றேன். நான், ”அது ஒரு மிருகம்“ என்று கூறினேன். 20''ஆனால் நான் மறுபடியுமாக ஆப்பிரிக்காவிற்கு செல்லட்டும், அங்கே ஆப்பிரிக்காவில் இருக்கின்ற மிக துஷ்டமான பழங்குடி இனமான, சிறிய பழங்குடி இனமான வேடுவ இனத்தவரான புதர்வாசியினிடத்தில் செல்லட்டும்,'' ஆகவே நான் ஒருக்கால் அவனுடைய மூத்த - மூத்த - மூத்த - மூத்த - பட்டனார் ஒரு வெள்ளை மனிதனையோ அல்லது எதையுமே கண்டிருக்கமாட்டான். எது வலது எது இடது கை என்று கூட அவனுக்கு தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் சாப்பிடுவது தான், அவன் சாப்பிடும்போது அதன் மீது கைகளைத் தான் வைப்பான், அது மனித மாமிசமாயிருந்தாலும் சரி, எதுவாயிருந்தாலும், அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே அவனுக்கு உண்டு பண்ணாது, அவன் ஐந்து வயதாயிருக்கும் போது அவனை நான் என்னிடமாக எடுத்துக் கொண்டால், பதினைந்தாவது வயதில் அவன் நல்ல ஆங்கிலம் பேசுவான், நல்ல கல்வியையுடையவனாக இருப்பான். ஏன்? அவன் ஒரு ஆத்துமாவைக் கொண்டிருக்கிறான். தேவன் அவனை மனிதனாக உண்டாக்கினார். இங்கே நாம் அமெரிக்கா முழுவதுமாக மக்களுக்கு மேலும், மேலும், மேலுமாக பிரசங்கித்துக் கொண்டிருப்பது போல், அவர்களிடம் கெஞ்சி, இசையச் செய்து மற்றவற்றைச் செய்து கொண்டிருப்பது போல, அவனுக்கும் ஒரு தடவையாவது சுவிசேஷத்தை கேட்க உரிமை இருக்கின்றது. அவன் அதை ஒரு தடவை கேட்கட்டும், அவன் கூக்குரலிட்டு மிக வேகமாக, பீடத்தண்டை ஓடுவதை கவனியுங்கள்'' என்று கூறினேன். பாருங்கள்? ஆம், ஐயா!. 21சகோதரனே, இன்றைக்கு, நான் ஆப்பிரிக்காவைக் குறித்து நினைக்கையில், அவர்களுடைய ஏழை சிறிய கறுப்பு கரங்கள் உயர்த்தப்பட்டு, ''சகோதரன் பிரன்ஹாம், இயேசுவைக் குறித்து இன்னும் ஒரு தடவை'' என்று கூறும் அதன் பேரில் தான் என் இருதயம் இருக்கின்றது, ஓ, இரக்கம். எனக்குள் ஏதோ ஒன்று குத்துகின்றது, எரிகின்றது. தேவையான அளவு விரைவில் பணம் கிடைக்கையில், நான் அங்கே செல்வேன்; எனக்கு சாப்பாட்டிற்கு தேவையானதற்கு போக மீதம் எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு காசைக் கொண்டும், மற்றவற்றைக் கொண்டும் அதைத் தான் செய்கிறேன், அதை தேவன் அறிவார், அநேக மக்கள் எனக்கு துணிகளைத் தருகின்றனர். என்னால் வாழ முடிகின்ற அளவுக்கு கொஞ்சமாக செலவு செய்து; மீதமானதை அரசாங்கம் ஒழுங்கு செய்திருக்கின்ற மிஷனரி சேமிப்பு நிதிக்கு கொடுத்துவிடுவேன். அதன் பேரில் நான் வருமான வரி கூட செலுத்துவதில்லை. மூன்று அல்லது நான்கு, ஐந்தாயிரம் டாலர்கள் எனக்கு கிடைத்த பிறகு, அங்கே கடல் கடந்து அதை எடுத்துச் சென்று மக்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தக்கதாக எடுத்துச் செல்வேன். அந்த நாளில் நான் பதில் கூற வேண்டியவனாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் எதற்கு பதில் கூறுவேன் என்று எனக்குத் தெரியும். 22நான், ஒரு பட்டணத்திற்குள் செல்லும் போது, வழக்கமாக, அவர்கள் நிறைய பணம் வைத்திருந்த போது, ஒரு பெரிய கூட்டத்தை நடத்துவேன், அவர்கள் மகத்தான கூட்டங்களையும் ஆயிரக்கணக்கான டாலர்களையும் கொண்டிருப்பார், நான் அதை செஞ்சிலுவை சங்கம் மற்ற பிறவற்றிற்கு கொடுத்து விடுவேன். இப்பொழுது, இப்பொழுது அவர்களைக் கடிந்து கொள்வதற்காக அல்ல, ஆனால் தெருவில் நாலாயிரம் டாலர்கள் மதிப்புள்ள கார்களில் பெரிய வைர பொத்தான்கள் உடையவராய், சுருட்டு புகைபிடித்துக் கொண்டு செல்கின்றனர். ஆனால்அந்த வியாதிப்பட்ட மக்களுக்கு வாரத்திற்கு ஐந்நூறு டாலர்கள் செலவழிப்பது... இல்லை, ஐயா. இல்லவேயில்லை. பிறகு நீ நகரத்திற்கு வெளியே சென்றவுடன், ஆகவே இதன் பேரில், அவர்கள் “ஒரு உருளும் பரிசுத்தன்'' என்றனர், இன்னும் அதைப் போன்ற மற்றவைகளைப் பேசி, பரியாசம் செய்து, நாம் எதற்காக நிற்கின்றோமோ அந்த மார்க்கத்தை குறை கூறுகிறார்கள். இல்லை, ஐயா! 23நானே அதை எடுத்து, என்னுடைய நியாயாதிபதியாகிய தேவனின் முன்பாக, தூர தேச சுவிசேஷ வேலைக்காக அதை நான் கொடுக்கின்றேன். அந்த நாளில் நான் என்னுடைய உக்கிராணத்துவத்திற்காக நான் கணக்கு கொடுக்க வேண்டியவனாக இருக்கிறேன் என்று நான் அறிவேன். அது சரியாகக் கொடுக்கப்பட வேண்டும். அது முற்றிலும் சரி. ஏனெனில் நான் ஜனங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் நான் தேவனிடத்திலும் நடந்து கொள்ள முடியும் என்பதை அறிந்திருக்கிறேன். உங்களுக்கான என்னுடைய எண்ணம் என்னவோ அதுவே தான் கிறிஸ்துவினிடமும் கூட. ஆகவே என்னை குறித்ததான உங்களுடைய எண்ணமும் அதேவிதமாகத் தான் (அது சரி) அது கிறிஸ்துவினிடமும் கூட ஆகும். 24இப்பொழுது, அந்த விதமான ஜனங்களைக் காணும்போது, பாருங்கள் மரிக்காத, அழிந்து போகாத, நித்திய ஜீவனைத் தவிர வேறெதையுமே செய்யக் கூடாத, தேவன் தம்முடைய சொந்த சுயாதிபத்தியத்தினால் உங்களுக்கு அளித்த அழியாத ஆத்துமாவை கொண்டிருக்கின்ற மனிதவர்க்கத்தைப் பாருங்கள், ஆகவே இப்பொழுது, அப்படியானால்... இப்பொழுது நான்... ஓ, இதை நான் சிறிது திருத்தட்டும் அல்லது ஒன்றைக் கூறட்டும். யாரோ ஒருவர் திரும்பச் சென்று, “சகோதரன் பிரன்ஹாம் ஒரு கால்வினிஸ்ட் ஆவார்” என்று கூறப் போகிறார். இல்லை, நான் அவ்வாறல்ல. வேதாகமத்தில் கால்வினிஸ்ட் இருக்கும் வரையில் நான் ஒரு கால்வினிஸ்டாக இருக்கிறேன். ஆனால் கால்வினிஸ்ட் வேதாகமத்தை விட்டு வெளியே செல்வானானால், அப்படியானால் நான் ஒரு ஆர்மினியன் ஆவேன். பாருங்கள்? நான் ஹோலினஸ்ஸில் விசுவாசம் கொண்டுள்ளேன், கால்வினிஸ்டிலும் கூட நான் விசுவாசம் கொண்டுள்ளேன். ஆனால் அவர்கள் இருவருமே, ஒன்று ஒரு பக்க உறுப்பைக் கொண்டு இந்த வழியாகச் சென்றுவிட்டது, மேலும் ஒன்று ஒரு பக்க உறுப்பைக் கொண்டு அந்த வழியாகச் சென்றுவிட்டது. எபேசியரின் புத்தகம் நம்மை தேவன் வைத்திருந்த சரியான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து நம்மை பொருத்தாதிருந்தால், நாமெல்லாருமே குழப்பத்திற்குள்ளாகியிருப்போம். ஆனால் அவர்கள் இருவருமே ஒரு போதகத்தை கொண்டிருக்கின்றனர், ஆனால் அவர்கள் சென்று அவர்கள் ஒவ்வொருவரும் - அது ஹோலினஸ் கூட்டத்தார் மற்றும், கால்வினிஸ்டுகளும் ஆர்மீனியர்களும் அதன் மேலேயே விதைக்கின்றனர், இப்பொழுது, கால்வினிஸ்டுகள் உண்மையாக ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கின்றனர். நான் அதை விசுவாசிக்கிறேன், அது அந்த கால்வினிஸ்ட் போதகம்... 25நான் இதை விசுவாசிக்கிறேன். சபை பாதுகாப்பில், நித்திய பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். வேதாகமம் வாசிக்கும் எந்த ஒருவரும் அதை அறிவர், ஏனெனில் அது எந்த ஒரு பழுதுமின்றி தோன்றும் என்று தேவன் ஏற்கெனவே கூறியிருந்தார். அது சரியா?அப்படியானால் அது அங்கே இருக்கப் போகிறது. அது சரியா? அந்த சபையானது நித்தியமாக பாதுகாப்பாயிருக்கிறது. இப்பொழுது, நீ சபையில் இருக்கின்றாயா என்பது அடுத்த காரியமாக இருக்கிறது. நீ சபையில் இருப்பாயானால் அது சரி. நீ சபையுடன் பாதுகாப்பாயிருக்கின்றாய், ஆனால் நீ சபையிலேயே இரு. மேலும் சபைக்குள் உங்களால் எப்படிச் செல்ல முடியும்? கைகளைக் குலுக்குவதினாலா? இல்லை. புத்தகத்தில் உங்கள் பெயரை எழுதிக் கொள்வதிலா? இல்லை, ஐயா. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். கல்வாரியிலே தேவன் நியாயந்தீர்த்த அந்த சரீரம், இயேசு கிறிஸ்துவின் சரீரமாகும், நாமெல்லாரும் அந்த சரீரத்திற்குள்ளாக ஒரே ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக இருக்கும் வரையில் நித்திய பாதுகாப்பை நாம் கொண்டுள்ளோம்; ஒன்றும் நம்மை பிரிக்க முடியாது, ஒன்றும் நம்மைத் தொட முடியாது. நீ வெளியே செல்வாயானால், நீ உன்னுடைய சொந்த விருப்பத்தின்படி செல்கிறாய். ஆனால் நீ கிறிஸ்துவின் சரீரத்திற்குள் இருப்பாயானால், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீயும் கூட எழுந்திருப்பாய். தேவன் ஏற்கெனவே அதைச் செய்துவிட்டார். 26உங்களால் பாவம் செய்ய முடியாது. ஓ, நீங்கள்... உங்கள் பார்வைக்கு நான் ஒரு பாவியாக இருக்கலாம், ஆனால் நான் கிறிஸ்துவுக்குள் இருப்பேனானால், தேவன் அதைக் காணமாட்டார், ஏனெனில் அவனுடைய பாவத்திற்காக பரிகாரம் செலுத்தப்பட்டாயிற்று, அவருடைய இரத்தம் அங்கே என்னுடைய பாவங்களுக்காக பரிகாரத்தை செலுத்தியது. பாருங்கள்? என்னால் பாவம் செய்ய முடியாது. ''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்“ ஏனெனில் அவன் பாவம் செய்யமாட்டான். தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. பாருங்கள்? அவன் ஒரு தவறைச் செய்வானானால், நிச்சயமாக அவன் - அவன் - அவன் - அவன், அப்பொழுது அவன் சரியாக அதை அறிக்கைச் செய்ய விரும்புவான். அவன் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானானால், அவன் - அதைச் செய்வான். அவன் அதைச் செய்யாமலிருப்பானானால், முதல் காரியத்திலேயே அவன் ஒன்றுமே கொண்டிருக்கவில்லை என்பதை அவன் காண்பிக்கின்றான். அது சரி. துவங்குவதற்கு அவன் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானென்றால்... 27சரியாக இங்கே, கோதுமை மணியை நீங்கள் நிலத்தில் விதைத்தால், அது எப்பொழுதுமே கோதுமை மணியாகவே இருக்கும். அதைச் சுற்றிலும் ஒட்டும் புல் (cockleburs) மற்றும் எல்லாமும் இருக்கும், ஆனால் அது இருக்கின்ற வரையில் கோதுமை மணியாகவே அது இருக்கும். அது சரியா? ஆகவே ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுடைய ஆவியினாலே பிறந்திருப்பானானால், அவன் உள்ளேயும் வெளியேயும் இருக்கமாட்டான், பின்னும் முன்னுமாக இருக்கமாட்டான், இங்கே வெளியே உலகத்திலும் மற்றும் இங்கேயும் இருக்கமாட்டான். இல்லை, ஐயா. இல்லவே இல்லை. நீ ஒரு நாள் ஒட்டும்புல் ஆகவும் பிறகு அடுத்த நாளில் கோதுமை மணியாகவும் இல்லை. தேவன் அதை நிலத்தில் கொண்டிருக்கமாட்டார். ஆம், ஐயா, நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்திருந்தால், அந்த நேரம் முதல் நீங்கள் கடந்து போகும் வரை நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கின்றீர்கள், மேலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகவே இருக்கிறீர்கள். மேலும் பிறகு நீங்கள் - நீங்கள் - நீங்கள் தேவனோடு அழியாமையுள்ளவர்களாக இருப்பீர்கள். அது சரி, சபையில் இருந்தால். 28இப்பொழுது, இப்பொழுது மரணத்தைப் பற்றி பேசுவோம். இப்பொழுது, இந்த நிலையிலுள்ள அந்த விதமான நிலையில் இருக்கின்ற ஒரு நபர், எப்படி வியாதிப்பட்டவராக இருக்க முடியும்?ஏனென்றால் உங்கள் சரீரமானது இன்னுமாக மீட்கப்படவில்லை. உங்கள் சரீரம் மீட்கப்படவில்லை. நீங்கள் எவ்வளவாக, எவ்வளவு அருமையானவனாக, எவ்வளவு பரிசுத்தவானாக எவ்வளவு பரிசுத்தமுள்ளவனாக, எவ்வளவு பரிசுத்த ஆவி பெற்றவராக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது உங்கள் ஆத்துமா மட்டுமே. ஆகவே உங்கள் ஆத்துமாவானது இன்னுமாக முழுமையாக்கப்படவில்லை. நம்முடைய இரட்சிப்பின் வாஞ்சையாகிய தேவனுடைய வாக்குத்தத்தை ஆசீர்வாதத்தை மாத்திரமே அது பெற்றிருக்கிறது. ஆனால் இப்பொழுது நம்முடைய உயிர்த்தெழுதல், தெய்வீக சுகமளித்தல் இவைகளைக் குறித்த மெய்யுறுதிப்பாடு (earnest) நமக்கிராவிடில், என்னிடத்தில் எவ்வித உறுதிப்பாடோ அல்லது உயிர்த்தெழுதலை நிரூபிக்கவோ நான் ஒன்றுமில்லாதவனாயிருப்பேன். 29கிறிஸ்து என்னுடைய இருதயத்தில் வாசம் செய்யாவிட்டால் என்பதைப் போன்று, நான் அதை ஏதோ ஒரு விதமான, அங்கே இருக்கின்ற ஒரு மனோதத்துவ காரியத்திலிருந்து எடுக்க வேண்டியிருந்தால், அதைப் போன்ற ஒன்றை விசுவாசிக்க வேண்டுமென்றிருந்தால், நல்லது, அப்படியானால் நான் - நான் - நான் அதைக் குறித்து சிறிது சந்தேகம் கொண்டவனாக இருப்பேன். அதன் காரணமாகத்தான் அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் வரும்போது, இங்கே மிஷனரிமார்கள் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை இங்கே கொண்டு வரும் போது அம்மக்கள் அந்த பழைய மண் விக்கிரங்களை மற்ற எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் வேதாகமத்தின் மனோதத்துவ முறையை மாத்திரமே கேட்டனர். அது சரி. என்னுடைய சொந்த சபையில் பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், மற்றும் அங்கே சென்ற எல்லாரும் இருக்கின்றனர், அவர்கள் தேவனுடைய வல்லமையானது பிரயோகிக்கப்பட்டதைக் கண்ட போது, அவர்கள் புரிந்து கொண்டனர். அப்பொழுது அவர்கள் தேவன் தேவனாகவே இருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டனர். 30ஆகவே இப்பொழுது, இந்த வியாதியை ஆரம்பிப்பது எது? இப்பொழுது முதலாவது காரியம், அது ஒரு வியாதியாக ஆகும் முன்னர் அது ஒரு ஆவியாக இருக்கின்றது, நீங்கள் ஒரு மானிடராக ஆகும் முன்னர் ஒரு ஆவியாக இருந்தீர்களோ அதைப் போன்று தான் இதுவும். இப்பொழுது, இங்கே உதாரணத்திற்கு சகோதரன் வில்லட் அவர்களை எடுத்துக் கொள்ளப் போகிறேன். சகோதரன் வில்லட், நான் - நீங்களும் நானும் இல்லாதிருந்த நேரம் ஒன்று இருந்தது. ஆகவே அப்பொழுது முதல் காரியமாக, தேவன் நமக்கு ஒரு ஜீவனை அளித்திருந்தார். ஆகவே நாம் இவ்விதம் எடுத்துக் கொள்வோம், இந்த மதிய வேளையில் உங்களுடைய சரீரத்தை பார்ப்போமானால், அணுக்களால் ஒன்று சேர்த்து மடித்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு கூட்ட உயிரணுக்களால் நீங்கள் உருவாக்கப்பட்டுள்ளீர்கள். ஆகவே இப்பொழுது, இயேசு வரத் தாமதிப்பாரானால் ஒரு நாளில் அந்த அணுக்கள் அழிக்கப்படும்; நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். அவைகள் துவக்கத்தில் எவ்வாறாக இருந்தனவோ அந்த விதமாக இருந்துவிடும், காற்றுக்குள் சென்றுவிடும். ஆனால் உங்களுடைய ஆவி வருகையில், அந்த அணுக்கள் மறுபடியுமாக இந்த ஆவியுடன் ஒன்று சேர்ந்து அந்த விதமாக மற்றுமொரு சகோதரன் வில்லட்டை, வாலிபமாக, அவரை தன்னுடைய சிறந்த நிலையில் கொண்டு வரும். 31ஒரு மனிதன் இருபத்தைந்து வயதைக் கடக்கையில், தன்னுடைய கண்களுக்கு கீழாக சில சுருக்கங்களையும் சில நரை மயிர்கள் வருவதைக் காண்பான். அது அவ்வாறாகத் தான் இருக்கும், ஏனெனில் மரணம் உங்களைப் பின் தொடருகிறது. ஆகவே ஏதாவதொரு நாட்களில் அது உங்களை எடுத்துக் கொள்ளப் போகின்றது. நீங்கள் யாராயிருந்தாலும் சரி, அது உங்களை எடுக்கத்தான் போகின்றது. ஆனால் அது படிப்படியாக... இங்கே நீங்கள் ஒரு மூலைக்குச் சென்றுவிடுவீர்கள், தேவன் உங்களை அந்த மூலையிலிருந்து வெளியே கொண்டு வருவார், பிறகு நீங்கள் இங்கே இந்த மூலைக்கு செல்வீர்கள், மரணம் உங்களை ஏறக்குறைய எடுக்கும், ஆகவே அங்கே, ஆனால் சிறிது கழித்து அது உங்களை எடுத்துக் கொள்ளும், ஆகவே அப்பொழுது, மரணம் என்ன செய்யுமென்றால், அது அதன் முழு தொகையையும் எடுத்துக்கொள்ளும், ஆகவே பிறகு அதனால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து முடிக்கையில்... தேவன் உங்களுக்கு இந்த ஜீவனைக் கொடுத்த போது, பிறகு நீங்கள் சுமார் இருபத்துமூன்று வயதில் சிறப்பாக இருக்கையில், நீங்கள் உயிர்த்தெழுதலுக்குள் வருகையில் மரணம் வரத் துவங்குவதற்கு முன்னர் நீங்கள் சரியாக இருபத்து மூன்று அல்லது இருபத்தைந்து வயதில் சரியாக நீங்கள் எப்படி இருந்தீர்களோ அதற்கு நீங்கள் திரும்ப வருகிறீர்கள். மரணம் தன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் கொண்டிருக்கும். அது அங்கே வரத் துவங்கும், ஆனால் நீங்கள் சரியாக முன்னர் எவ்வாறு இருந்தீர்களோ அதற்கே நீங்கள் திரும்ப வருவீர்கள் 32இப்பொழுது உங்கள் சரீரத்தில் இருக்கின்ற உங்களுடைய - உங்களுடைய ஒவ்வொரு உயிரணுவும்... அதை நாம் இப்பொழுது பார்ப்போம்; நீங்கள் உயிரணுவின் பின் உயிரணுவாக வந்து இங்கே மேடையில் வைக்கப்பட்டு, உங்கள் சரீரத்திலிருக்கின்ற ஒவ்வொரு உயிரணுவிற்கு பிறகு, நீங்கள் உண்டாக ஆரம்பித்த ஒரு மிகச் சிறிய மரபணுவாக வருவீர்கள், வெறுங் கண்ணால் அதைக் காணமுடியாது. நீங்கள் அதை பூதக்கண்ணாடியைக் கொண்டு தான் காணமுடியும். நான் ஜீவ அணுவை பூதக்கண்ணாடியால் கண்டிருக்கிறேன். அது ஒரு சிறிய துண்டு துண்டான நூலைப் போன்று காணப்படுகின்றது. வளர ஆரம்பிக்கின்ற முதல் காரியம் என்னவென்றால் அது சரியாக முதுகு தண்டில் ஆரம்பிக்கின்றது. அது ஒரு சிறு முடிச்சைப் போன்று இருக்கிறது. அது ஒரு உயிரணுவின் மேலே சேர ஆரம்பிக்கும் முதல் சிறிய உயிரணு அதுவேயாகும். 33இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் வந்திருக்கின்ற அந்த ஒரு சிறிய தனி உயிரணுவை நான் எடுத்துக் கொள்வேனானால், ஒரு மிகச் சிறிய ஜீவ அணு... ஜீவ அணு என்றால் என்ன? ஜீவ அணுவானது ஒரு மிகச்சிறிய, உயிரணுக்களிலே சிறிதானது. நல்லது, அதன் பிறகு என்ன? இப்பொழுது, நான் உங்களில் ஒவ்வொன்றையும் இந்த சிறிய உயிரணு வரைக்கும் உங்களுக்கு நான் காண்பித்தேன், ஆனால் இன்னுமாக அதை நான் கண்டெடுக்கவில்லை. நான் உங்களுடைய உயிரணுக்களை பரப்பி வைத்திருக்கிறேன், அவ்வளவு தான். நல்லது பிறகு, அடுத்த காரியம், இரத்த அணுக்கள் மற்றும் மாம்ச அணுக்கள், அவைகள் என்னவாயிருந்தாலும், அவைகளெல்லாவற்றையும் வெளியே இங்கே பரப்பி வைத்துவிட்டேன், ஆனால் இன்னுமாக உன்னை நான் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது, இப்பொழுது ஒரு ஜீவ அணுவிற்கு நான் வந்திருக்கிறேன். நல்லது, நான் அந்த சிறிய அணுவை எடுக்கப் போகிறேன். இப்பொழுது, நீங்கள் எங்கே (இருக்கிறீர்கள்?), உங்களுடைய ஜீவன். ஆகவே அந்த ஜீவன் முதலாம் உயிரணுவாகிய ஜீவ அணு ஆகிறது, பிறகு ஒவ்வொன்றும் அதன் சுபாவத்தை பொறுத்து அமைகிறது , நாய்க்கு பிறகு நாய், பறவைக்கு பிறகு பறவை, மனிதனுக்கு பிறகு மனிதன், உயிரணுக்கள் பெருகுகின்றது, உயிரணுவிற்கு மேல் உயிரணு, உயிரணுவிற்கு மேல் உயிரணு. நீ இருக்கின்ற நிலைக்கு அது வருகிறது, மானிட வர்க்கத்திற்கு, உயிரணுக்கள் பெருகுதல். இப்பொழுது, அது அவ்வாறிருக்க வேண்டுமென்று தேவனால் நிர்ணயிக்கப்பட்டது. 34ஆனால் இப்பொழுது, புற்று நோயைக் குறித்தென்ன? அவனைக் குறித்து சிறிது பேசுவோம். இப்பொழுது, தேவன் உங்களுக்கு உங்களுடைய ஜீவனை அளித்தார். இன்று இங்கே நீங்கள் இருக்கிறீர்கள்; இங்கே நானிருக்கிறேன், எனக் கூறலாம். இங்கே - என் கையின் மீது ஒன்றும் இல்லை. ஆனால் சில காலத்திற்குப் பிறகு, அங்கே, அங்கே என் கையின் மீது புற்றுநோய் இருக்கலாம். நல்லது, அந்த புற்று நோயானது எவ்வாறு அங்கு வந்தது? புற்றுநோய் என்னவென்பதை நாம் காண்போம். இப்பொழுது, அவனை நாம் எடுப்போம்; சென்று நாம்அவனை எடுப்போம். இப்பொழுது, அவனும் ஒரு கூட்ட அணுக்கள் ஆவான். உங்களுக்கு அது தெரியுமா? கட்டி, கண்படல நோய், அந்த காரியங்களின் எந்த ஒன்றும் அணுக்கள் ஆகும். அவைகளுக்கு எந்த ஒரு உருவமும் கிடையாது. அவைகளின் சில பரவிச் செல்லும், சில ஒரு பூச்சியைப் போன்று காணப்படும், மேலும் சில - மெல்லிய கோடுகளாக ஒரு சிவப்பு நூல்கள் போன்று இருக்கும். ஆகவே அந்த - பிறகு ஒரு பெண்ணின் மார்பகத்தில் வழக்கமாக வருகின்ற ரோஸ் புற்று நோய் என்ற ஒன்று உள்ளது; அது கேக்குகளைப் போன்று ஒன்றிற்கு மேல் ஒன்றாக இருக்கிறது, பிறகு அவை பரவிக் கொண்டே செல்லும். பிறகு அவை எங்கு வேண்டுமானாலும் வளரும். 35சில சமயங்களில் சதை வளர்ச்சிகள் பொருத்தமற்றதாக, நீளமாக, நீள சதுரமாகவும், மற்ற எல்லாவற்றைப் போலவும் உள்ளன. அவைகளுக்கு உருவம் கிடையாது, ஏனெனில் அவைகள் உருவமே இல்லாதிருக்கின்ற ஒரு ஆவியைப் பற்றினதாக இருக்கின்றது. ஆனால் அது அணுக்களின் வளர்ச்சியாகும்; அது ஒரு கூட்ட அணுக்கள் ஆகும். கூறப் போனால் சரியாக இப்பொழுது உனக்குள்ளிருக்கும் ஒரு சதை வளர்ச்சி அல்லது ஒரு புற்றுநோய் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களாகும், அது வளர்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும்; அது தின்று கொண்டிருக்கும், உன்னிலிருந்து உன்னுடைய ஜீவனை உரிஞ்சிக் கொண்டிருக்கும்; அது இரத்த ஓட்டத்தைக் கொண்டு ஜீவித்துக் கொண்டிருக்கும். கண் சதை வளர்ச்சியான கண்புரைகள் கண்ணில் இருக்கின்ற கோந்தை எடுத்து அதன் மேல் வளர்ந்து, பரந்து மூடிக்கொண்டு உன்னுடைய கண்களை மூடிவிடும். அவைகளில் சில வந்து ஒருக்காலும்... காசநோயைப் போன்று, அது ஒரு சிறிய கிருமியாக வரும். அதற்கென்று எந்த உரு அளவும் கிடையாது. அந்த சிறிய கிருமியானது ஒரு யானையைப் போன்று வளர்ந்து கொள்ளும், ஒரு - ஒரு தோல் துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈயைப் போன்றும் ஆகிக் கொள்ளும். பாருங்கள்? அந்த கிருமிக்கு குறிப்பிட்ட அளவென்று ஒன்றுங்கிடையாது. அவைகளில் சில ஒரு சரீர உருவை எடுத்துக் கொள்ளும், சில எடுத்துக் கொள்ளாது. சில அணுக்களுக்குள் செல்லாது. சில ஒரு ஆவியாக வந்து ஆத்துமாவை வேதனைக்குட்படுத்தும். நாம் அந்த பகுதியை பார்க்க முயற்சிப்போம். என்னால் கூடுமானால், அந்த ஆத்துமா - ஆவி எங்கிருந்து வருகின்றதென்றும் எப்படி இங்கே சரியாக அதனுள்ளாக... அது வருகிறதென்றும் அந்த பகுதியை நாளை மதியம் பார்க்கத் தக்கதாக விட்டுவிடுகிறேன். 36இப்பொழுது, நண்பர்களே, இதை நான் ஏதோ ஒரு விதமான உளவியல் ரீதியாக கூறிக் கொண்டிருக்கவில்லை. நான் அநேக வருடங்களாக பிசாசுகளுடன் இடைப்பட்டு சமாளித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆராதனைகள் முடிந்த பிறகு இரவில், சில சமயங்களில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறதென்பதை, நீங்கள் மாத்திரம் அதை அறிவீர்களானால்... உங்களுக்கு அது தெரியாது. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு ஆவிக்கெதிராக நிற்கும் போது, நீங்கள் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருப்பீர்களானால் நலமாக இருக்கும். அங்கே அப்படியே நின்று கொண்டு முயற்சித்துக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் அது எந்த ஒரு நன்மையும் பிறப்பிக்காது. ஆனால் கூறப் போனால் ஒரு பிசாசு உனக்கு கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டுமென்றால், அது அதை அடையாளங் கண்டுகொள்ளும். நீ எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் சரி, நீ எவ்வளவு எண்ணை ஊற்றினாலும் சரி இங்கே இருக்கின்றதைத் தான் சத்தியத்தைத் தான் அது அடையாளங்கண்டு கொள்ளும். அது தான் உண்மை. இயேசு அவனிடம் கூறினார், ''வெளியே வா,'' என்று. 37நினைவில் கொள்ளுங்கள், அந்த சீஷர்கள், அவனை வெளியே துரத்த, உதைத்துக் கொண்டும், முறுக்கிக் கொண்டும், முயற்சித்துக் கொண்டுமிருந்தனர். “அவர்கள் ஏன் எங்களால் அவனை துரத்த கூடாமற் போயிற்று?'' என்றனர். ''காரணம் உங்கள் அவிசுவாசமே'' என்றார். அவர், ''அவனை விட்டு வெளியே வா“ என்றார். அந்த பையன் கீழே விழுந்தான். அவன் எப்பொழுதுமே கொண்டிராத ஒரு அதிகமான வலிப்பு நோயின் திடீர் எழுச்சியைக் கொண்டிருந்தான். பாருங்கள்? பாருங்கள், அவைகள் அதிகாரத்தை அடையாளங்கண்டு கொள்கின்றன. பவுல் பிசாசுகளைத் துரத்துவதைக் கண்ட அந்த அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த பையன்களை கவனியுங்கள். அந்த ஆசாரியனின் மகன்கள், அவர்கள் “நாமும் அதே காரியத்தைச் செய்ய முடியும்'' என்றனர், யாரோ ஒரு ஆசாரியனின் மகன்கள். ஆகவே, ”அவர்கள் சென்று எங்களால் பிசாசுகளை வெளியே துரத்த முடியும்'' என்றனர்; அப்போஸ்தலர்: 19-ம் அதிகாரம், காக்காய் வலிப்பு திடீர் எழுச்சியைக் கொண்டிருந்த அந்த மனிதனிடம் அவர்கள் சென்று, ''இயேசுவின் பேரில் ஆணையிட்டு உங்களுக்கு கட்டளையிடுகிறோம், அவனை விட்டு வெளியே வா என்றனர். அந்த பிசாசு கூறினது... ''இப்பொழுது, பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் நாமத்தில்...'' அந்த பிசாசு “இப்பொழுது, இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்?” என்றது. ஆனால் என்ன சம்பவித்ததென்று உங்களுக்கு தெரியும்; அது அந்த மனிதரின் மீது பாய்ந்து, அவர்கள் துணிகளை கிழித்து போட்டது, மேலும் அவர்களுக்கே அந்த காக்காய்வலிப்பு நோய் வந்தது, அவர்கள் தெருக்களில் ஓடினார்கள். 38அந்த அதே பிசாசுகள் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே தான் அநேக அதிதீவிர மதபக்தி வைராக்கியம் காணப்படுகிறது. இந்த சாயங்காலத்தில் இது தான் சபையாகும். இன்றைக்கு தெய்வீக சுகமளித்தல் என்றழைக்கப்படுகின்ற அதிதீவிர மூடபக்தி வைராக்கியம் தேசத்தில் இருக்கின்றது, அது அடைக்கப்பட வேண்டிதாயிருக்கிறது. அது தான் உண்மையான ஒரு நோக்கத்தின் பேரில் நிந்தையைக் கொண்டு வருகிறது. அதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு மதம் என்றழைக்கப்படுகின்ற அநேக காரியங்கள் இருக்கின்றன. அவை அடைக்கப்பட வேண்டும்; அவைகள் வெறி ஈடுபாடுகள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அது தான். தேவனுடைய உண்மையான சபையானது அதனுடன் இப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டத்தை கொண்டிருக்கச் செய்கின்றது. ஆனால் நாம் அமெரிக்கா (புரிகிறதா?) ஆகவே அந்த விதமாகத்தான் அது இருக்கும். கோதுமை மற்றும் படர் கொடிகள் மற்றும் களைகள் ஒன்றாக வளர்கிறது என்று தேவன் கூறினார். அவைகளைப் பிடுங்காதீர்கள். அவைகளை ஒன்றாக வளரவிடுங்கள், ஆனால் அவைகளின் கனிகளால் அவைகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும். அங்கே கனிகள் இல்லை, ஏன், அங்கே ஜீவன் இல்லை, அங்கே ஒன்றுமே இல்லை. 39இப்பொழுது, இந்த உயிரணுவை கவனியுங்கள். உதாரணத்திற்கு, கூறுவோமானால், அநேக சமயங்களில் சிவப்பு புற்று நோய் வழக்கமாக ஒரு பெண்ணின் கருப்பையைத் தாக்கும், அவை பெண்மைக் காயங்கள் இன்னும் மற்றவை. இப்பொழுது, அந்த... அந்த - அந்த ஆளைக் குறித்து இப்பொழுது நாம் பார்ப்போம், அவனுடைய உயிரணுக்கள், இந்த புற்று நோய்... இப்பொழுது, ஒரு புற்று நோய். இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் ஆவிக்குரியதற்கு நிழலாக இருக்கின்றது. அதை நீங்கள் அறிவீர்களா? இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் ஆவிக்குரியதற்கு நிழலாக இருக்கிறது. உதாரணத்திற்கு, இந்த விதமாக, நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் பிறக்கும் போது, நம்முடைய பிறப்பை விளைவிக்கிற காரியத்தில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன. கிறிஸ்து மரித்த போது அவருடைய சரீரத்திலிருந்து, ஜலம், இரத்தம், ஆவி வெளி வந்தது. அது சரியா? (சபையார், ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) மூன்று கூறுகள். ஆகவே நாம் மறுபடியும் பிறக்கையில் அந்த கூறுகள் மூலமாகத்தான் நாம் கடந்து வருகிறோம்: நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இப்பொழுது, அவையெல்லாம் ஒரே காரியத்திலும் இருக்கும், ஆனால்... ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமானாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கலாம். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டு அதே நேரத்தில் உங்களுடைய அசுத்தத்தில் இருந்து கொண்டேயிருக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட்ட மற்றும் ஒரு தூய்மையான பரிசுத்த ஜீவியம் ஆகிய இரண்டையும் முற்றிலுமாக செய்யலாம். பாருங்கள், வேதாகமத்தில் 1யோவான்: 5:7-ல் பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர் இருப்பதாக கூறியிருக்கிறார்: பிதா, குமாரன், பரிசுத்தஆவி, ஆகவே - பிதா, வார்த்தை மற்றும் குமாரனாகிய பரிசுத்த ஆவி, ஆகவே இம்மூன்றும் ஒன்றாயிருக்கிறார்கள். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று; ஜலம், இரத்தம், ஆவி, இம் மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. ஒன்றல்ல, ஆனால் இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. குமாரனைக் கொண்டிராமல் பிதாவை நீங்கள் கொண்டிருக்க முடியாது; பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல் குமாரனை நீங்கள் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அவர்கள் பிரிக்க முடியாதவர்கள், ஒன்றாயிருக்கிறார்கள். திரித்துவம் ஒரு, ஒருமையில் இருக்கிறது. 40இங்கே சுற்றிலும் இதை நான் கேட்கவில்லை, ஆனால் தேசம் முழுவதும் அதை நீங்கள் அதிகமாக கேட்பீர்கள். அந்த எளிய காரியத்தின் பேரில் உள்ள குழப்பம் தான் பெந்தெகொஸ்தே குழுக்களில் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய காரியமாக உள்ளது, நான் அவர்களுடைய தலைவர்களை ஒன்று சேர்த்து அவர்கள் இருவரும் அந்த அதே காரியத்தை விசுவாசிக்கின்றனர் என்பதை நிரூபிக்கத் தக்கதாக செய்தேன். அது அவர்களுடைய இடையே இருக்கின்ற பிசாசாகும்; அவ்வளவு தான். அந்த மகத்தான பெந்தெகொஸ்தே சபையானது அந்த சிறிய பழைய பாரம்பரியங்களை கீழே போட்டு ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய ஒன்றான சபையாக தங்களை இணைத்துக் கொள்வார்களானால், எடுத்துக் கொள்ளப்படுதல் வரும். ஆனால் சாத்தான் அவர்களை பிரித்து வைத்திருக்கும் வரையில்... சரி... அதுதான் அவனுடைய வழியாகும். ஆகவே அவர்கள் முற்றிலுமாக அதே காரியத்தை தான் விசுவாசிக்கின்றனர். ஒருவர், “நல்லது, இது தான்அது'' என்பார். நான் நல்லது, இது தான் அது என்றால், அப்படியானால் அதுதான் இது என்றேன். ஆகவே உங்களுக்கு புரிகின்றதா, அவையெல்லாம் ஒரே காரியம் தான். ஆனால் நன்றாக பாருங்கள். அந்த மூன்றொன்றான தேவனுடைய திரித்துவத்தில்... இப்பொழுது அங்கே... இப்பொழுது தேவன் தம்முடைய ஒருத்துவத்தில், பிதாவாகிய தேவன், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி. இப்பொழுது அஞ்ஞானிகளைப் போன்று நாம், ''நம்முடைய தேவர்கள்'' என்று கூறுவதில்லை, “அது நம்முடைய தேவன்” என்பதே. பாருங்கள்? அது தேவனுடைய மூன்று விதமான இயல்பாகும். இப்பொழுது, கவனியுங்கள், இப்பொழுது, சாத்தானும் கூட திரித்துவத்தில் இருக்கின்றான். அவனுடைய வல்லமைகளும் திரித்துவத்தில் இருக்கின்றது. 41இப்பொழுது, ஆனால் கவனியுங்கள். அப்படியானால் ஜலம், இரத்தம், ஆவி புதிய பிறப்பை கொணர்கிறது. அது சரியா? இப்பொழுது கவனியுங்கள். அது தான் புதிய பிறப்பிற்கு பிரதிநிதித்துவமாக இருக்கிறது. புதிய பிறப்பு வருவதற்கு முன், இயற்கை பிறப்பிற்கு எது பிரதிநிதித்துவமாக உள்ளது? என்ன, தாய்மார்களாகிய நீங்கள்... குழந்தையைப் பிரசவிக்கையில் முதலாவதாக வருவது என்ன? ஜலம், அடுத்ததாக, இரத்தம், அடுத்ததாக (பாருங்கள்?) அது தான் ஜீவனை உண்டாக்குகிறது (பாருங்கள்) அந்த நபரை உண்டாக்குகிறது; ஜலம், இரத்தம், ஆவி. 42இப்பொழுது, நம்முடைய அடுத்ததாக புற்றுநோயின் பேரில் சிறிது பார்ப்போம், இன்னும் ஐந்து நிமிடங்கள் நமக்கு இருக்கிறது என்று நான் யூகிக்கிறேன். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு புற்றுநோயின் பேரில் நாம் பார்ப்போம். யார் அந்த நபர்? அவன் பிரிநிதித்துவப்படுத்துகிறது என்ன? அவன் ஒரு அழுகிய பொருட்களை தின்று வாழ்பவன். அவன் மரித்த காரியங்களைத் தின்னும் பருந்திற்கு பிரதிநிதித்துவமாக இருக்கிறான். ஆகவே புற்றுநோயானது, ஒரு உயிரணுவானது அடிக்கப்பட்டு அது உடையும் போது அதிகப்படியாக அந்த காயத்திலிருந்து வருகிறது. ஆகவே அதனுள் இருக்கும் ஒரு சிறிய அணு பின்மாற்றமடைகிறது. ஓ, ஒரு பாப்டிஸ்டுக்கு அது ஒரு பெரிய வார்த்தையல்லவா, அப்படித்தானே? அது சரி, ஆனால் அது அந்த அணு பின்மாற்றமடைகிறது. நான் பின்மாற்றத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு பாப்டிஸ்ட். 43இங்கே அன்றொரு நாள் இங்கே அர்க்கன்ஸாஸில் யாரோ ஒருவர், “சகோதரன் பிரன்ஹாம்'' என்றார்... அவர் ஒரு நசரீன்கள் கூட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் ஆவார்; அவர் நடக்க ஆரம்பித்து தன்னுடைய கக்கத்தண்டங்களை தோள்களின் மீது வைத்துக் கொண்டார். அவர், ''என்ன தெரியுமா? முதன் முறையாக நான் - நான் நினைத்தேன் நீங்கள் - நீங்கள் பிரசங்கித்ததைக் கேட்டேன், நீர் ஒரு நசரீன் குழுவைச் சார்ந்தவர் என்று நினைத்தேன்” என்றார். “அவர் பிறகு மக்களில் அநேகம் பேர் பெந்தெகொஸ்தே மனிதன் என்று கூறினர். ஆனால் நீர் இப்பொழுது ஒரு பாப்டிஸ்ட் என்று உங்களைக் கூறிக் கொள்கிறீர். அது எனக்குப் புரியவில்லையே'' என்றார். நான் “ஓ, அது சுலபமானது'' என்றேன். நான் கூறினேன், ''நான் ஒரு பெந்தெகொஸ்தே நசரீன்பாப்டிஸ்டு” அது - அது சரியே. சரி. இல்லை, கிறிஸ்து இயேசுவுக்குள் நாமெல்லாரும் ஒன்று, பரிசுத்த ஆவியினால் நம்மை ஒன்றாக்கியிருக்கிறது. அது சரி. 44இப்பொழுது, கவனியுங்கள், இந்த சிறிய அணு நொறுக்கப்படும் போது பின்மாற்றமடைகின்றது. அது சிறிதாக ஆரம்பிக்கிறது... மற்ற சிறிய அணுக்கள் அங்கே தங்கள் உயிரைக் கொடுக்க விரைந்தோடுகின்றன, அது தான் புண்பட்ட இடத்தில் வருகின்ற சீழ் ஆகும். அவை உங்களுடைய ஜீவனுக்காக போரிடும் மிகச் சிறிய போர் வீரர்கள் ஆகும். அங்கே திரட்டிக் கொள்ள முயற்சிக்கும் - முயற்சிக்கும் பிசாசு வல்லமைகளாகிய அதன் மீது மோத அவைகள் ஓடிச் செல்லும், தங்கள் உயிரை அளிக்கும். அது தான் அந்த... உங்கள் இரத்தத்தில் - புண்ணில் சிறிய போர் வீரர்கள் ஆகும், அவைகள் உங்களைக் காக்க தங்கள் உயிர்களை அளித்தவைகள் ஆகும். 45இப்பொழுது, அங்கே ஒரு சிறிய அணு புறக்கணிக்கப்படுகையில் இந்த பிசாசு துவங்கிக் கொள்கிறது, அவன் வரத் துவங்குகிறான்; அவன் அணுக்களை பெருக்கத் துவங்குகிறான். உங்கள் குழந்தைகள் உங்கள் கர்ப்பத்தில் வளரத் துவங்குவது போல், நீங்கள் உங்கள் தாய்க்குள் இருந்தது போல சரியாக அதே விதமாக அவன் ஒரு சரீரத்தை அமைக்கிறான்; அணுவின் மேல் அணு, அணுவின் மேல் அணு, அது எந்த விதத்திலும், எங்கேயும் அப்படியே இருக்கும். அவைகளுக்கு மானிட வர்க்கத்தைப் போல எந்த ஒரு உருவமும் கிடையாது. அது அதனுடைய சுபாவத்திற்கு பிறகு அது ஒரு ஆவியிலிருந்து வருகிறது, எந்த விதமாகவும் அது அணுவின் மேல் அணு, அணுவின் மேல் அணுவாக அது வளரும். ஆகவே இப்பொழுது, முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் பலவீனமடைந்து, வியாதிப்பட்டவராய் உணர்வீர்கள். நீங்கள் மருத்துவரிடம் செல்வீர்கள், அவர் உங்களை பரிசோதிப்பார். ஒருக்கால் அவரால் அதை கண்டு பிடிக்க இயலாது. அவர் கண்டுபிடித்தால், ஒருக்கால் அதை அவர் அறுத்தெடுத்துவிடுவார். அவர் அதை சரியாக வெட்டி அதை எடுத்துவிடுவாரானால், சரி, அவர் அதை எடுத்துவிட்டார். ஆனால் அவரால் அதை முழுவதுமாக வெட்டி எடுக்க முடியவில்லையெனில், பிறகு அது தொண்டையில் அல்லது அது சரியாக வெட்டி எடுக்கப்பட முடியாத எங்கோ ஒரு இடத்தில் அது இருக்குமானால், அதனுடைய ஒரு சிறு துளிகூட இருக்குமானால் அது அப்படியே ஜீவித்துக் கொண்டிருக்கும். (பாருங்கள்?) ஏனெனில் அதற்கு... இது போல் உங்களுடைய கையை வெட்டி எடுத்து அதை முடித்துவிடலாம் அல்லது எதையாகிலும் செய்யலாம் அல்லது நீங்கள் வெட்டி எடுத்துவிடலாம்... நான் கூற முனைவது என்னவென்றால், நீங்கள் மைய சரீரத்தை வெட்டிவிட்டு உங்கள் கையை அப்படியே விட்டுவிட்டால், என்ன, அது பிழைக்காது. ஆனால் - ஆனால் (பாருங்கள்?) அது நீங்கள் கொண்டிருக்கின்ற உருவைப் போன்று அதற்கு கிடையாது. அது ஒரு அசைந்து கொண்டிருக்கிற பிசாசின் வல்லமையாகும். 46ஆகவே இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் அவைகளை அழைக்கிறீர்கள்... மருத்துவர் அதை ''புற்றுநோய்“ என்று அழைக்கிறார். தேவன் அதை ”பிசாசு“ என்றழைக்கிறார். இன்றைக்கு கவனியுங்கள். அவர்கள் அதை... கான்சர், புற்றுநோய் என்ற வார்த்தை எங்கிருந்து வருகிறது? அது மருத்துவ ரீதியாக பயன்படுகிற லத்தின் வார்த்தையிலிருந்து வருகிறது, அதற்கு ”ஒரு நண்டு“ என்று அர்த்தமாகும். நீங்கள் கடற்கரையில் அதைக் காணலாம், அது அந்த விதமாகத்தான் - அது கிரியை நடப்பிக்கிறது. அது எட்டு கால்களையுடைய ஆக்டபஸ் நீர் விலங்கு அல்லது அதைப் போன்று அகன்று பரவுகையில் இரத்தத்தை உருஞ்சும், ஏன், ஒரு சதை வளர்ச்சி, கண்புரை மற்றும் மற்றைய வியாதிகள், அவைகள் ஒவ்வொன்றும் ஒரு கிருமியிலிருந்து வருகின்றது. ஆகவே அது சரீரமாவதற்கு முன்னர், அது ஒரு ஜீவனாக இருக்க வேண்டும். அது உருவாகு முன்பாக - அல்லது - அல்லது எழும்பி அநேக அணுக்களை உண்டாக்கு முன்பாக, அது ஒரு ஜீவனாக இருந்தாக வேண்டும். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர்). இப்பொழுது, அந்த கான்சர், புற்றுநோய் எங்கிருந்து வந்தது? யார், அது எங்கிருந்து வந்தது? சில சமயத்திற்கு முன்னர் இங்கே அது உங்கள் மேல் இல்லை, ஆனால் இப்பொழுது ஒருக்கால் உங்கள் மேல் அது இருக்கலாம். அது எங்கிருந்து வந்தது? அது வேறொரு ஜீவன், அது உங்கள் ஜீவனிலிருந்து வித்தியாசப்பட்ட ஒன்று, உங்களுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. அது வேதனைப்படுத்துகின்ற ஒன்று, உங்களுடைய ஜீவனை உறிஞ்சிவிடும். அதன் காரணமாகத்தான் இயேசு அதை, “ஒரு பிசாசு” என்றழைத்தார். 47அவர்கள் இன்றைக்கு காக்காய் வலிப்பு இழுப்பு நோய் என்று அழைக்கின்றனர், அவர்கள் காக்காய் வலிப்பு என்கின்றனர். ஏன், வேதாகமத்தில், காக்காய் வலிப்பு நோயை, இயேசு அதை “ஒரு பிசாசு” என்று அழைத்தார். கீழே நிலத்தில் விழுந்து கொண்டு, வாயில் நுரைபொங்கி தள்ளி கொண்டு மற்ற எல்லாமுமிருந்த அந்த பையனோடு அந்த மனிதன் வந்த போது, அவன் “இவனுக்கு பிசாசு பிடித்திருக்கிறது, அது இவனை அடிக்கடி அக்கினிக்குள்ளும் தண்ணீருக்குள்ளும் தள்ளுகிறது” என்று கூறினான். இப்பொழுது, அவர்கள் அவனுடைய பெயரை மெருகேற்றி காக்காய் வலிப்பு இழுப்பு நோய் என்று அழைத்தனர், ஆனால் அவன் பிசாசாகும். ஆகவே இயேசு ''பிசாசாகிய நீ, பிள்ளையை விட்டு வெளியே வா“ என்று கூறினார். அது முற்றிலுமாக சரி. இப்பொழுது இழுப்பு நோய் வழக்கமாக சிறு நீரகக் கோளாறினால் உண்டாகிறது. சிறிது கழித்து அதைப் பார்ப்போம். பாருங்கள்? அந்த காக்காய் வலிப்பு, ஒரு சிறுநீரகக் கோளாறினால் உண்டாகிறது. 48இப்பொழுது, இதில் கவனியுங்கள், பிறகு இந்த அணு அங்கே அமர்ந்துக் கொள்கிறது; அது ஒரு தீய ஆவி ஆகும். அவன் ஒரு ஜீவனை அமைக்கிறான்; அவன் வளர்கிறான், பெரிதாக, பெரிதாக ஆகிறான். அவனுக்கு ஒரேயொரு வேலை தான் இருக்கிறது; அது உன்னுடைய ஜீவனை எடுப்பதாகும், உங்களுடைய நாட்களை எழுபது வருடங்களுக்கு குறைக்கும் படியாய் அதற்கென தான் பிசாசு அவனை அனுப்பி வைத்தான். 49இப்பொழுது, நான் ஒவ்வொரு மருத்துவருக்கும் அவர்கள் ஒவ்வொரு மருத்துவ விஞ்ஞானத்திற்கும், வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். ஆம் ஐயா. அவர்கள் மக்களுக்கு செய்திருக்கும் உதவிக்காக தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. அதிலில்லாமல் இன்றைக்கு உலகில் உங்களால் என்ன செய்ய முடியும்? மருத்துவ விஞ்ஞானத்திற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவன் விஞ்ஞானத்தை மோட்டார் வாகனம் செய்ய அனுமதிக்காதிருப்பாரானால், நான் இங்கே மிகவும் பிரயாசப்பட்டு நடந்து வர வேண்டியதாக இருக்கும். மின்சார விளக்குகளுக்காக, என் கைகளைக் கழுவும் சோப்பிற்காக, என் பல்லை விளக்க பற்பசை, டூத்பேஸ்டிற்காக, ஒவ்வொன்றிற்காகவும் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன், ஏனெனில் எல்லா நல்ல காரியங்களும் தேவனிடமிருந்து தான் வருகின்றது. 50ஆனால் நான் உங்களுக்கு கூறட்டும், ஒரு சிறு துளி மருந்தும் கூட எந்த ஒரு வியாதியையும் சுகப்படுத்தினது கிடையாது. அவன் ஏதோ ஒரு போலி மருத்துவராக இருந்தாலொழிய, ஒரு மருத்துவருங் கூட, எந்த ஒரு உண்மையான மருத்துவரும் தாங்கள் சுகமளிப்பவர்கள் என்று கூறிக் கொள்ளமாட்டார்கள், என்று உங்களிடம் கூறுவார். சரியாக மேயோ சகோதரர்கள், உங்களில் அநேகர்... இரண்டு அல்லது மூன்று தடவைகள் என்னிடம் நேர்காணல்கள் நடத்தப்பட்டது. சுகமளிக்கப்பட முடியாத அங்கிருந்து வந்த நோயாளிகளைக் குறித்து... நீங்கள் 'ரீடர்ஸ் டை ஜஸ்ட்' பத்திரிக்கையின் நவம்பர் மாத பிரதியை வாசித்தீர்களா?எத்தனைப் பேர் நவம்பர் மாத “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பிரதியில் என்னுடைய கட்டுரையைப் படித்தீர்கள்? பாருங்கள்? அவர்கள் கைவிட்டுவிட்ட ஒரு குழந்தையைக் குறித்து நேர்காணல் வைக்க என்னை அங்கே அழைத்தனர். ''அதைச் செய்யவே முடியாது'' என்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி அது எப்படி செய்யப்பட வேண்டுமென்று என்னிடம் கூறினார், அது செய்யப்பட்டது. சரி, இப்பொழுது, அவர்கள் என்னை அங்கே அழைத்தனர். ஜிம்மி மற்றும் அவர்கள் மேயோ வழக்கமாக அமரும் சரியாக அந்த கதவின் மேல் ஒரு மிகப் பெரிய அறிவிப்பு குறியில் ''சுகமளிப்பவர்கள் என்று எங்களை பறைசாற்றிக் கொள்வதில்லை. நாங்கள் இயற்கைக்கு உதவி செய்கிறோம் என்று மாத்திரமே கூறிக் கொள்கிறோம். ஒரே ஒரு சுகமளிப்பவர் தான் இருக்கின்றார், அது தேவன் தான்“ என்று கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் உலகத்திலேயே சிறந்தவர்கள். இப்பொழுது, சில போலி மருத்துவர்களை நாம் கொண்டிருக்கிறோம், ஆம். அது சரி, சில போலி பிரசங்கங்களைக் கூட நாம் பெற்றிருக்கிறோம். அது சரியே, ஆகவே அது இரண்டும் ஒன்றாகவே பொருந்தும். 51கவனியுங்கள், தன்னை சுகமளிப்பவன் என்பதாக உரிமை பாராட்டும் எந்த ஒரு மனிதனும், அவன் ஒரு கதை கூறுபவன் ஆவான், ஏனெனில் அவனால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் வேதாகமம், ''உன்னுடைய பாவங்களையெல்லாம் மன்னிக்கிறதும் உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறதுமான கர்த்தர் நானே'' என்று கூறுகின்றது. நான் ஆராய்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். என்னுடைய அறையில், அந்த - தேசத்தில் இருக்கின்ற மருத்துவர்களில் சிறந்தவர்கள் வந்திருக்கின்றனர். நண்பனே, ஒரு வாழ்க்கையில் பின்னால், அது என்னவாயிருக்கிறது என்பது உனக்குத் தெரியாது. நானும் மற்ற காரியங்களை பொது ஜனத்தின் மத்தியில் நான் வெளியே சொல்லுவதில்லை. மனிதர் இரகசியமாக வருகின்றனர், உலகத்தில் இன்னுமாக அநேக நிக்கொதேமுக்கள் உள்ளனர் என்று நீங்கள் நினைப்பதில்லையா; அவர்களில் ஆயிரக்கணக்கானோர் நிச்சயமாக உள்ளனர். அவர்கள் அதைப் பார்த்து கூட்டங்களுக்கு வந்து டி-ஷர்ட்டுகள் அணிந்து கொண்டு, மற்றும் அதைப் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு, நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் மெருகேற்றப்பட்ட பெயர்களைக் கொண்டவராய், கூட்டத்திற்குள் அமர்ந்திருப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு மெதுவாக வந்து இரகசியமாக அழைத்து யாராவது ஒருவரை நேர்க்காணலடைய அனுப்பி வைப்பர். அங்கே உட்கார்ந்து கொண்டு, ''சகோதரன் பிரன்ஹாம், அது உண்மையென்று நாங்கள் விசுவாசிக்கிறோம்“ என்று கூறுவர். நம்மைப் போல அவர்களும் மானிடர் ஆவர். நிச்சயமாக, என்றோ ஒரு நாள் அதினூடாக கடந்து செல்ல வேண்டிய அந்த கறுத்து திரையிற்கு அப்பால் அவர்கள் பார்க்கின்றனர். ஒவ்வொரு மனிதனுடைய வாஞ்சையும் அதுவே. 52ஆனால் புற்றுநோய்கள் மற்றும் காரியங்கள் எல்லாம் முற்றிலுமாக ஒரு மாம்ச சரீரத்தில் உருவாக்கி கொண்டு, மேலே எழும்பி, உங்கள் ஜீவனை எடுக்கும் தீய ஆவிகள் ஆகும். இப்பொழுது, மருத்துவரைப் போல நான் செய்ய விரும்புவேனானால், நான் அதை அறுத்து தரையின் மீது வைத்துவிடுவேன்... அல்லது உதாரணத்திற்காக, கூறப் போனால் இந்த பூமியில் நீங்களே ஒரு புற்று நோயாக இருந்தீர்கள். இப்பொழுது, இதோ தெய்வீக சுகமளித்தல் இங்கே உள்ளது. ஒரு மருத்துவர் செய்கின்ற விதத்தில் நான் உங்களை அகற்ற வேண்டுமென்று விரும்புவேனானால், நான் செய்ய வேண்டியது உங்கள் சரீரத்தை அல்லது ஏதோ ஒன்றை அவையெல்லாம் பூமியிலிருந்து மறைந்து போகும் அளவிற்கு தேய்க்க வேண்டியதே. மருத்துவர் உங்களிலிருந்து அந்த வளர்ச்சியை எடுத்துப் போடுவது போல. அங்கே அதில் அதினுடைய காரியமானது ஒன்றுமே இருக்காது, ஆனால் தெய்வீக சுகமளித்தலில், நீங்கள் ஒரு புற்று நோயாக இருந்தால், நான் உங்களிலிருந்து உங்கள் ஜீவனை வெளியே அழைத்துவிடுவேன், பிறகு நீங்கள் சென்று கொண்டிருப்பீர்கள். உங்கள் ஜீவன் உங்களை விட்டு போய்விடும், ஆனால் உங்கள் சரீரம் எப்படியிருந்ததோ அதே விதமாகவே இங்கே அப்படியே இருக்கும். 53இப்பொழுது, இங்கே தான் காட்சியமைப்பு கருத்தும் நேரமும் தெய்வீக சுகமளித்தலில் தேவனுடைய மிக மோசமான சத்துருவாகும். இந்த கூட்டங்களில் சகோதரன் பாக்ஸ்டர் இந்த காரியங்களை புரிந்து கொள்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் உட்கார்ந்து, அவருக்கும், சகோதரன் பாஸ்வரத்திற்கும் மேலும், மேலும் விவரித்தேன். ஆனால் நடந்தது இது தான். அநேக மக்கள் அதைப் புரிந்து கொள்கிறார்களா என்று எனக்கு சந்தேகம் வருகிறது, ஏனெனில் சிறிது கழித்து ஜனங்கள் திரும்பவுமாக வந்து ''சுகத்தை நான் பெற்றுக் கொண்டேன், சகோதரன் பிரன்ஹாம், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தான், ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் அது - அது என்னை விட்டு சென்று விட்டது“ என்று கூறுவதை நீங்கள் காணலாம் என்னால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. நான் நினைத்ததென்னவெனில் அவர்கள் சரியான விதத்தில் கூட்டத்தில் உட்காருவதில்லை என்பதே. மக்கள் புரிந்து கொள்வதில்லை. மனிதர் புற்று நோய்கள் அல்லது தங்கள் கண்களின் மேல் சதை வளர்ச்சியுடையவர்களாய் முழுவதுமாக குருடாக மேடையின் மேல் வந்து அவர்களுக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பிறகு வேதாகமத்தை வாசிப்பர், கீழே நடந்து சென்றுவிடுவர், மூன்று அல்லது நான்கு நாட்களில் முதலில் இருந்தவாறு அதே விதமாக குருடாகியிருப்பர். நடந்தது என்ன? எந்த ஒரு மாம்சத்திலிருந்தும் ஜீவனானது வெளியே சென்றுவிட்ட பிறகு சிறிது நேரம் சுருங்கும் என்பதை எல்லோரும் அறிவர். அது சரியா? 54யாராவது, இங்கே, ஒரு மானை அல்லது ஒரு பசுவை அல்லது அதைப் போன்ற எந்த ஒன்றையும் கொன்றிருக்கிறீர்களா? நிச்சயமாக. சரி, அதை இன்றிரவு எவ்வளவு எடை இருக்கிறது என்று பாருங்கள், இங்கேயிருக்கின்ற வேட்டையாளர்களாகிய என்னுடைய நண்பர்களே, நீங்கள் ஒரு மானைக் கொன்று அதை ஒரு எடை தட்டின் மீது வையுங்கள், அதன் எடை எவ்வளவு இருக்கிறதென்று பையனிடம் கூறுங்கள். கவனியுங்கள், அடுத்த நாள் காலையில் அது இருந்ததை விட அதிக பவுண்டுகள் எடை குறைவாக இருக்கும். ஒரு மனிதன் மரித்து போகையில், சாவு காரியங்களைச் செய்கிறவன், (undertaker) அந்த சடலத்திலிருந்து அவன் முதலாவதாக பொய்ப்பல் அல்லது கண், அதனுள் என்னயிருந்தாலும் அதை வெளியே எடுத்துவிடுவான், ஏனெனில் அந்த சடலம் வந்தால் சுருங்கும், அதை அது வெளியே தள்ளிவிடும், ஏனெனில் மானிட சரீரம் சுருங்கும். மற்ற ஒவ்வொரு மாம்சமும் சுருங்கும். அணுவிலிருந்து ஜீவன் வெளியே செல்லும் போது அது கீழே செல்ல ஆரம்பித்து சுருங்கும். சுமார் எழுபத்திரண்டு மணி நேரத்திற்கு அவ்விதமாகச் செய்யும். பிறகு அது வீங்க ஆரம்பிக்கும். சாலையில் ஒரு சிறு நாயின் மேல் வண்டி ஏறிச் செல்லுமானால், அதை அப்படியே சூரிய வெப்பத்தில் சுமார் மூன்று நாட்களுக்கு இருக்கும்படிக்குச் செய்யுங்கள், பிறகு என்ன நடக்கிறதென்று பாருங்கள், அது முன்பு இருந்ததை விட ஒரு பெரிய நாயாக இருக்கும். அப்படியே வீங்கிவிடும். அது சரியா? 55நல்லது, வியாதிப்பட்ட நபரிடமிருந்து ஒரு - ஒரு பிசாசானது துரத்தப்படும் போது அதே காரியம் தான் சம்பவிக்கிறது. முதல் சில நாட்களில், ''ஓ, நான் அருமையாக இருப்பதை உணர்கிறேன்'' பிறகு ''நான் - நான் முன்பிருந்ததை விட - விட நான் மிகவும் வியாதியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய சுகமளித்தலை நான் இழந்துவிட்டேன்'' என்று கூற ஆரம்பிப்பர். விசுவாசம் அதை எவ்வளவு நிச்சயமாக வெளியே கொண்டு சென்றதோ அதைப் போன்று அவிசுவாசம் அதை உயிரோடெழச் செய்யும். இயேசு, “அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டுவெளியே போன பிறகு, அது வறண்ட இடங்களில் அலைகிறது, பிறகு வேறு ஏழு தீய ஆவிகளோடு திரும்பிவரும்'' என்று கூறினார். அந்த வீட்டின் நல்ல மனிதன் அந்த கதவை பாதுகாக்க அங்கே நிற்கவில்லையெனில், அது நேராக உள்ளே வரும். ஆகவே உங்கள் வீட்டின் நல்ல மனிதன் உங்களுடைய விசுவாசமே ஆகும். அது 'வெளியே நில்' என்று கூறும். அது தான் காரியம். 56ஆனால் இப்பொழுது ஒரு கவனிக்கப் பட வேண்டிய ஒரு அற்புதமாக இராமல் நீங்கள் சாதாரணமாக சுகமாக்கப்பட்ட ஒரு நோயாளியை கவனிப்பீர்களானால், தெய்வீக சுகமளித்தல் மற்றும் ஒரு அற்புதம் இரண்டும் வித்தியாசப்பட்ட காரியங்களாகும். தெய்வீக சுகமளித்தல் ஒரு காரியம்; அற்புதம் என்பது வேறொரு காரியமாகும். ஆனால் ஒரு சாதாரணமாக தெய்வீக சுகமளித்தலில் ஒரு அசுத்த ஆவி ''ஓ! துரத்தப்படும் போது, ஒரு புற்று நோய் பிசாசு,அது அந்த நபரை விட்டுச் செல்லும் போது“, ''ஓ... இப்பொழுது, நீங்கள் இன்னும் தெளிவான காட்சியாக காணும் விதத்தில் ஏதோ ஒன்றை நாம் எடுத்துக் கொள்வோம். கண்புரையான சதை வளர்ச்சியை நாம் எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு குருடான நபரை கவனிப்பீர்களானால், அந்த மனிதனுக்கு என்ன சம்பவித்தது... இங்கே இன்னுமாக, கண்சதை வளர்ச்சியுடன் யாராவது வந்திருக்கிறார்களா அல்லது இல்லையா என்று என்று எனக்குத் தெரியவில்லை, நான் அவர்களை சில நிமிடங்களுக்கு நிற்க வைத்துவிடுவேன். ஏன்? அந்த சுருக்கமானது ஆரம்பிக்கின்றது. அவர்கள் திரும்பவுமாக வந்து நமக்கு ஒரு சாட்சி அளிக்க அவர்களிடத்தில் கூறுவேன். ''ஓ'', என்னே! அவர்களால் அருமையாக காணமுடியும். ''ஓ, என்னே'' அவர்களால் காரியங்களை அற்புதமாய்க் காண முடிகிறது. ”ஓ,என்னே! என்னால் காண முடிகின்றது! ஆம்! நான்...'' காரணம் என்ன? ஜீவன் போய்விட்டிருந்தது. அந்த கண்சதை வளர்ச்சியின் சரீரமானது சுருங்கிக் கொண்டிருக்கிறது. நல்லது, அது இரண்டு நாட்களுக்கு அவ்வாறு செய்து கொண்டிருக்கும் “ஓ, நான் சுகமாகிக் கொண்டிருக்கிறேன்'' என்பர். 57பிறகு சிறிது கழித்து அவர்களுக்கு தலைவலி வரத் துவங்கும். அவர்கள் மிக அருமையாக உணரமாட்டார்கள். அடுத்த நாள் காலை எழுந்திருக்கையில், ''மறுபடியுமாக என்னுடைய பார்வையை நான் இழக்கிறேனே“ என்பார்கள். அவர்களில் சிலர், ''அஹ் - உஹ், அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்; அந்த பரிசுத்த உருளையர் குழு உன்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது'' என்று கூறினர். அதை நீங்கள் விசுவாசிக்காதீர்கள். அது பிசாசினுடைய ஒரு பொய்யாகும். நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் சரியாக மறுபடியும் குருடாகிப் போவீர்கள். ஆனால் நீங்கள் உறுதியாகப் பற்றி கொண்டிருப்பீர்களானால் இல்லை, “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன்,'' என்று கூறுங்கள். பிறகு என்ன சம்பவிக்கிறது? அந்த சரீரம் இவ்வளவு பெரிதாக வீங்கும். அது மறுபடியுமாக அந்த பார்வையை மூடிக் கொள்ளும். சரீரத்தில் இருக்கின்ற புற்றுநோய் வீங்கும். மறுபடியுமாக உங்களுக்கு வேதனையும் வலியும் வரும். பிறகு நீங்கள் மிக மோசமாக வியாதிப்படுவீர்கள், பயங்கரமாக வியாதிப்படுவீர்கள். ஏன்? அந்த செத்த பெரிய சதைவளர்ச்சியானது அங்கேயே மரித்துப்போய் கிடக்கின்றது. நீங்கள் மறுபடியுமாக மருத்துவரிடம் சென்றால் அவர், “ஓ, அது அர்த்தமற்றது. புற்றுநோய் அங்கே அப்படியே இருக்கிறது. நான் அதை பார்க்க முடிகிறது'' என்பார். நிச்சயமாக அது அங்கே இருக்கிறது,” ஆனால் அது மரித்துவிட்டது. அல்லேலூயா. 58இப்பொழுது, இரத்த ஓட்டமானது சரீரத்தை சுத்திகரிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் இருதயம் துடிக்கையில், அது இரத்தத்தை சரீரம் முழுவதும் கொண்டு செல்கின்றது, அது அந்த சதை வளர்ச்சியை எடுக்கின்றது. நிச்சயமாக, அது உங்களை சுகவீனமாக்கும். உங்களுக்குள் எங்கோ ஓரிடத்தில் ஒரு மாமிச துண்டு தொங்கி கொண்டிருக்கிறதாக இருப்பீர்களானால், அல்லது ஒரு பாம்பைப் போன்று நீளமாக, அல்லது உங்கள் விரலைப் போன்று பெரிதான ஒன்றாக, அங்கே தொங்கி கொண்டு, மரித்துப் போய் அந்த அவ்வளவு பெரிய மாமிசம் உங்களுக்குள் தொங்கிக் கொண்டு அது அழுகிக் கொண்டிருக்குமானால்? நல்லது, உங்கள் இரத்த ஓட்டமானது, அது முழுவதும் ஓடும் போது, அதை சுத்தமாக வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அங்கே மரித்துப் போன அந்த சரீரம் அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் அந்த ஜீவனானது அதை விட்டுப் போய்விட்டது. தேவனுடைய வல்லமையானது விசுவாசத்தின் மூலமாக அதை வெளியே துரத்திவிட்டது. அவன் ஒரு பிசாசு; அவன் போய்த்தானாக வேண்டும். 59ஆனால் ஜனங்கள் போதிக்கப்படாத காரணத்தால் அவர்கள் சென்று தளர்ந்து விடுகிறார்கள், அங்கே நின்று கொண்டிருக்கின்ற அதே பிசாசு மறுபடியுமாக தன் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளுகிறான். நீங்கள் ஊக்கத்திற்குள் இருக்கையில் இந்த மேடையின் மேல் தேவன் தம்முடைய ஆவியானவரின் மூலமாக உங்களுக்கு ஏதாவது ஒன்றை கூறுவாரானால் அதை நீங்கள் ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள், இல்லையென்றால் மோசமான காரியம் ஒன்று உங்கள் மேல் வரும் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் இயேசு, “அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவனுடைய பின்னிலைமை முதலில் இருந்ததை விட ஏழு மடங்கு அதிக கேடுள்ளதாயிருக்கும்” என்று கூறினார். அது சரியா? அசுத்த ஆவியானது ஒரு மனிதனை விட்டு வெளியே சென்ற போது, அது வறண்ட இடங்களில் சுற்றி நடந்து, வேறு ஏழு பிசாசுகளுடன் திரும்ப வரும். ஆகவே நீங்கள் அவிசுவாசிக்க வேண்டாம், நீங்கள் சரியாக அதனுடன் நில்லுங்கள். அதை உங்கள் இருதயத்திலிருந்து கூறுங்கள். “இல்லை, ஐயா. நான் அசைக்கப்படுவதில்லை. நான் எவ்வளவு சுகவீனமடைந்தாலும் பரவாயில்லை, அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது,'' என்று கூறுங்கள். பிறகு முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் சுத்தமாகத் துவங்குவீர்கள். அப்பொழுதிலிருந்து எல்லா காரியமும் சரியாகிவிடும். பாருங்கள், அது மரித்துவிட்டது. அறுவைச் சிகிச்சையின் மூலமாக உங்களிலிருந்து மருத்துவர் வெளியே எடுத்துவிடும் அந்த காரியமானது, அந்த அதே வளர்ச்சியானது உங்களுக்குள் ஜீவனில்லாமல் அப்படியே கிடக்கும். 60நீங்கள், “என்ன சகோதரன் பிரன்ஹாம், அதற்குள் ஜீவனா, அது என்னுடைய ஜீவனை எடுக்குமா?'' எனலாம். இல்லை, ஐயா அந்த ஜீவன் உங்கள் ஜீவனிலிருந்து வேறுபட்டிருக்கிற ஒன்றாகும். நீங்கள் ஒரு ஜீவனாயிருந்து ஒரு உயிருள்ள ஆளானீர்கள், அது ஒரு ஜீவன், ஒரு உயிருள்ள உருவாக ஆளானது, என்று உங்களுக்கு சற்று முன்னர் காண்பித்தேன். நீங்கள் தேவனால் உண்டானீர்கள், அது பிசாசினால் உண்டானது. நான் என்ன கூற முனைகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? பிசாசியல். இப்பொழுது, நீங்கள் நின்று அந்த காரியம் எவ்வாறு காட்சியளிக்கிறது என்று நீங்கள் காணத்தான் வேண்டும். ஓ, என்னே, என்னை மன்னியுங்கள், ஏறக்குறைய மணி மூன்று முப்பது ஆகிவிட்டது, என்னை மன்னியுங்கள். கவனியுங்கள், நண்பர்களே, ஓ, இந்த உலகிற்கு தேவைப்படுகின்றது என்ன...! 61நான் கடந்த சுமார் ஏழு வருடங்களாக அமெரிக்கா முழுவதும் போதித்து இந்த சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்திக் கொண்டு வருகிறேன். தேசம் முழுவதுமாக வேதத்தையும் பிசாசியலின் பேரிலும் போதித்து, என்ன செய்ய வேண்டுமென்று ஜனங்கள் புரிந்து கொள்ள செய்வது எப்படி என்கின்ற ஒரு நல்ல எண்ணம் எனக்கு சற்று ஏற்பட்டது. அதன் காரணமாகத் தான் அவர்கள் அநேக தடவைகள் இந்த கூட்டங்களுக்கு செல்கின்றனர். மற்றும் உங்களுக்கு புரியவில்லையெனில், மக்கள் வெளியே வந்து... அநேக தடவைகள்... இப்பொழுது, அந்த ஆள் வந்து தனக்கு தெய்வீக சுகமளித்தல் வரம் உண்டென்று கூறினது உங்கள் நினைவிலுள்ளதா? நீங்கள் சுகமாக்கப்பட்டிருப்பீர்களானால் அந்த தெய்வீக சுகமளித்தல் வரம் உங்களுக்குள்ளேயே தான் இருந்தது. அது நீங்கள் தான். எந்த ஒரு வரமும் விசுவாசத்தினால் நடப்பிக்கப்படுகிறது. நான் எவ்வளவாக தெய்வீக சுகமளித்தல் வரத்தை உடையவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடு விசுவாக்கிறேன். ஆனால் நீங்கள் இங்கே நின்று, அதே விதமான விசுவாசத்தை கொண்டிராவிட்டால், அது உங்களுக்கு எந்த ஒரு நன்மையும் பிறப்பிக்காது. நான் உங்களுக்கு அநேக மணிக்கணக்காக, வாரங்களாக, மாதங்களாக ஜெபிக்கக் கூடும். அது தெய்வீக சுகமளித்தலோடு உள்ள பிரசங்கிகள் அல்ல, அது தெய்வீக சுகமளித்தலின் வரத்தை கொண்டிருந்து சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருக்கிற நீங்கள் தான், ஏனெனில் அது விசுவாசத்தினாலே தான் வருகின்றது. விசுவாசத்தினாலே! தேவனுடைய ஒவ்வொரு செயல்பாடும் விசுவாசத்தினால் மட்டும் ஆகும். 62தேவனுடைய முழு சர்வாயுதவர்க்கமும் விசுவாசத்தினால் தான் உள்ளது. இந்த உலகத்தின் ஒரு இயற்கை காரியம் கூட நாம் கொண்டிருப்பதில்லை. கிறிஸ்தவ சபையின் ஒவ்வொரு காரியமும் விசுவாசக் கிரியையினாலே ஆகும். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை கவனியுங்கள், அவை அன்பு, சந்தோஷம், சமாதனம், நீடிய பொறுமை, நன்மை, சாந்தம், மென்மை குணம், பொறுமை. அது சரியா? ஒவ்வொரு காரியமும் இயற்கைக்கு மேம்பட்டது, ஒன்றும் இயற்கையானதல்ல. ஆகவே நாம் இயற்கையான காரியங்களை நோக்கிப் பார்ப்பதில்லை, ஏனெனில் நாம் இயற்கைக்கு மேம்பட்டதை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அதை அஸ்திபாரப்படுத்துவதற்கான ஒரேவழி விசுவாசம் ஆகும், உண்மை என்று தேவன் சொன்னதின் மேல், நாம் காணக் கூடாததை நோக்கிப் பார்க்கிறோம். ஆபிரகாமைப் போல் இல்லாதவைகளை இருக்கிறவைகளைக் போல நாம் அழைக்கிறோம், அவன் அதைப் பெற்றுக் கொண்டான். ஆமென். தேவன் செய்ததைப் போன்றே ஆபிரகாம் இல்லாதிருந்த காரியங்களை இருக்கிறவைகளைப் போலவே பாவித்தான். அவன் நூறு வயதாகியிருக்கையில் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசம் மூலமாக சந்தேகப்படவில்லை. 63என்னால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறது, உங்களால் முடிகின்றதா? பாருங்கள், ஒரு நாள் காலை சாராள் எழுந்திருப்பதைக் காண்கிறேன். தேவன் “ஆபிரகாமே!” என்றழைத்தார். ''ஆபிரகாம் நீ ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய்'' என்றார். சாராள் எழுந்தாள். ''சாராளே நீ எப்படி உணருகிறாய்?'' என்றான். இது இருபாலாரைக் கொண்ட ஜனக் கூட்டமாகும், ஆனால் கவனியுங்கள் ஒரு வித்தியாசமும் இல்லை''. ''நல்லது, தேவனுக்கு மகிமை, நாம் அதைப் பெறப் போகிறோம். போய் மலர்வகை பின்கள் (pin) மற்ற எல்லாவற்றையும் வாங்கி தயாராக வை'', சரி, இன்னொரு மாதம் கடந்தது, ''சாராள், எப்படி உணர்கிறாய்?'', ''ஒரு வித்தியாசமும் இல்லை'', ஒரு வருடம் கடந்தது. “சாராளே, அதைக் குறித்தென்ன?” ''ஒரு வித்தியாசமும் இல்லை'', பத்து வருடங்கள் கடந்து சென்றது. ''ஒரு வித்தியாமும் இல்லை'', இருபத்தைந்து வருடங்கள் கடந்து சென்றது. “ஒரு வித்தியாசமும் இல்லை''. ஆபிரகாம், பெலவீனமடைவதற்கு பதிலாக, இன்னும் பலமுள்ளவனாக ஆனான். அது எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு அற்புதத்திற்கு மேலான ஒன்றாக இருக்கப் போகிறதென்று அவன் அறிந்திருந்தான், ஏனெனில் அவன் தேவனை விசுவாசித்தான், தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசத்தின் மூலமாக அவன் தடுமாறவேயில்லை. அவன், ''நாம் அதைக் கொண்டிருக்கப் போகிறோம்'' என்று கூறினான். ஆகவே ஒரு நாள் காலை சாராளுடைய கர்ப்பம் பெருக்கமுறத் (Swell) துவங்கியது, சிறு ஈசாக்கு பிறந்தான், ஏனெனில் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அவன் இல்லாத காரியங்களை இருக்கிறவைகளாகவே எண்ணினான்... காரியங்களை நம்பினான்... 64உணர்வுகளினாலல்ல, காட்சியினாலல்ல, நீங்கள் உணர்ச்சிகளினாலோ அல்லது காட்சியினாலேயோ நடப்பதில்லை. அது விசுவாசத்தினாலேதான். ஆகவே தேவன் ஒரு காரியத்தை உரைத்திருப்பாரானால், நீங்கள் எந்த காரியங்களைக் கேட்டாலும், நீங்கள் ஜெபிக்கையில், “அதைப் பெற்றுக் கொண்டோம் என்று நீங்கள் விசுவாசியுங்கள், அதை அப்படியே பற்றிக் கொள்ளுங்கள்'' என்றார். தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார்; அது அவ்வாறேதான் இருக்கவேண்டும். ஆமென். பிசாசுகள்... பிதாவிலுள்ள விசுவாசம், குமாரனிலுள்ள விசுவாசம், பரிசுத்த ஆவியிலுள்ள விசுவாசம், மூன்றும் ஒன்று. பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர் யெகோவாவில் விசுவாசம் எந்த காரியத்தையும் அசைக்கும். அது சரியே. ஓ, என்னே, நிச்சயமாக அது அப்படித்தான். தேவனில் விசுவாசம் கொண்டிருங்கள். அவரை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அசையாதிருங்கள். சரியாக அங்கேயே தரித்து நில்லுங்கள். தேவன் அவ்வாறே கூறியுள்ளார். 65ஆகவே தீயஆவிகள், அவை என்னவாயிருக்கிறது? அவைகள் ஆவியான உயிருகள். இப்பொழுது, அந்த - அந்த மருத்துவர், ''உனக்கு புற்று நோய் இருக்கிறது. உனக்கு காசநோய் (TB) இருக்கிறது. உனக்கு கண் சதை வளர்ச்சி இருக்கிறது. உனக்கு நுரையீரல் சவ்வின் அழற்சி இருக்கிறது; உனக்கு இது இருக்கிறது'' என்று கூறுகிறார். அது ஒரு பிசாசாகும். அது ஒரு ஜீவன், அந்த ஜீவனிற்கு பின்னால் ஒரு ஆவி இருக்கிறது. எத்தனைப் பேர் அதை அறிவீர்கள், ஒரு புற்றுநோய், கண் சதை வளர்ச்சி, அது கொண்டிருக்கிறது - அது கொண்டிருக்கிறது... அது ஒரு ஆவியாகும், அதற்குள் ஜீவனைக் கொண்டிருக்கிறது - என்பதை நீங்கள் காணலாம். ஆவியில்லாமல் எந்த ஒன்றும் ஜீவனைக் கொண்டிருக்காது (நீங்கள் பாருங்கள்?), ஆகவே அதை நடப்பிக்க ஒரு ஜீவனானது எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். 66அங்கே இருக்கின்ற அந்த மரத்திற்கு கூட ஜீவன் இருக்கின்றது. உலகத்தில் இருக்கின்ற எல்லா விஞ்ஞானத்தாலும் ஒரு புல்லின் இதழைக் கூட உண்டாக்க முடியாது. அது உங்களுக்குத் தெரியுமா? அதைப் போன்று காணப்படுகின்ற ஏதோ ஒன்றை அவர்கள் உண்டாக்குகின்றனர், ஆனால் ஜீவனின் சூத்திரத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியாது. அது தான் தேவன். பாருங்கள்? இயேசு மரத்திடம், “நீ சபிக்கப்பட்டிருப்பாய், உன்னிடம் ஒரு கனியும் இல்லை, உன்னில் ஒரு போதும் கனியிராது”, என்றார். அவர்கள் அந்த வழியாக வந்தனர். அக்காலை வேளையில் சுமார் எட்டு மணியாக இருந்தது. சுமார் பதினொறு மணிக்கு இரவு ஆகாரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பேதுரு “அந்த மரத்தைப் பாருங்கள்; அது வேரிலிருந்து மரித்துப் போயிருக்கிறது,'' என்றான். ஏன்? அந்த மரத்தின் வேர்களில் இருந்த அந்த ஜீவனை இயேசு கடிந்து கொண்டார், அந்த முழு மரமும் மரித்தது. அல்லேலூயா! 67அந்த அதே கிறிஸ்துவால் புற்று நோயை வேர் முதற் கொண்டு சபிக்க முடியும், அந்த முழு காரியமும் மரித்துப் போகும். அந்த மரம் சில மணி நேரங்களுக்கு முன்னர் எப்படியிருந்ததோ அதேவிதமாக அங்கே நின்று கொண்டிருந்தது, ஆனால் நீங்கள் பார்ப்பீர்களானால் இலைகள் விழ ஆரம்பித்தது, பிறகு அதனுடைய பட்டைகள் உரியத் துவங்கினது, தேய்ந்து போகத் துவங்கினது. நாளுக்கு நாள், வாரத்திற்கு பிறகு வாரம், இன்னும் சிறிது கழித்து அந்த மரத்தின் ஒரு சிறு துண்டு கூட இருக்கவில்லை. அல்லேலூயா! புற்றுநோய், சதை வளர்ச்சி, கண்புரை வளர்ச்சி, அல்லது எதுவாயிருந்தாலும் கிறிஸ்து பேசினால் போய்த்தான் ஆகவேண்டும். அவர் பிசாசுகளைத் துரத்தினார். ஆகவே அவர் கூறினார், ''என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், அல்லது சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகமடைவார்கள். 68நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? என்னை மன்னியுங்கள், நான் இங்கே இம்மதிய வேளையில் உங்களை ஒரு மணி நேரம் கூடுதலாக உட்காரும்படிக்குச் செய்துவிட்டேன். நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்று கூறுகின்றனர் - ஆசி) என்ன இப்பொழுது நடக்கப் போவதென்ன? நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக கொண்டு உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறதென்று உங்கள் இருதயத்தில் விசுவாசிப்பீர்களானால்... நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சுகமாக்கப்படப் போகிறீர்கள் என்று விசுவாசிக்கப் போகிறீர்களா? பிசாசு உங்கள் மேல் வேறெதையும் வைத்திடும்படிக்கு விடாதீர்கள். அப்படியே பற்றிக் கொண்டிருங்கள். ''மருத்துவரே, மருத்துவரே அது எப்படி காணப்படுகிறது?'' என்பீர்களானால், அவர், ''ஏன், அது அங்கேயேதான் இருக்கிறது'' என்பார். உங்களுடைய இருதயத்தில் உங்களுக்குத் தெரியும்; என்ன சம்பவித்ததென்று உங்களுக்குத் தெரியும். “ஹம்! முதல் காரியமாக, அவர், என்ன ஆச்சரியம், அதற்கு என்ன சம்பவித்தது?'' என்று கூறுவார். அப்பொழுது, பாருங்கள், டாக்டர், நான் உங்களுக்குக் கூறுவது என்னவெனில் சம்பவித்தது இதுதான். இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கினார். அது சரி. இயேசு கிறிஸ்து என்னை சுகப்படுத்தினார் என்று கூறுங்கள். 69சரி, சற்று நேரம் நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோம். ஆகவே சகோதரன் வில்லட், ஒரு நிமிடத்திற்கு இங்கே வருவீர்களா, சகோதரனே? பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒருக்கால் சில வேளைகளில் கர்த்தாவே உம்முடைய ஊழியக்காரன் ஞானத்தை பிரயோகப்படுத்தாமல் இவ்வளவு நேரமாக பேசியிருக்கலாம். ஆனால் ஒருக்கால் பவுல் அந்த ஒரு இரவு முழுவதுமாக பிரசங்கம் செய்ததைப் போன்று உணரலாம். ஒரு சிறிய ஆள் ஜன்னலிற்கு வெளியே விழுந்து கொல்லப்பட்டான். தன்னுடைய ஜீவியத்தில் தேவனுடைய வார்த்தையுடன் இருந்த அந்த அப்போஸ்தலன், சென்று அந்த பையனின் மேல் தன் சரீரத்தை வைத்தான், அவனுக்குள் ஜீவன் வந்தது, அவன் மறுபடியுமாக ஜீவித்தான். அருமை தேவனே, இந்த மகத்தான நாகரீகத்தின் சூரிய அஸ்தமனமானது நடந்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன், அது கடந்து சென்றது, நாளின் நடுப்பகுதியானது சென்றது, சாயங்கால நிழல்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. இந்த பூமியின் மீது வந்து கொண்டிருக்கின்ற இந்த காரிருளின் இடத்தை எடுத்துக் கொள்ள தேவனுடைய இராஜ்ஜியத்திலிருந்து மகத்தான வெளிச்சமானது வெளிவந்து கொண்டிருக்கிறது. தேவனே, ஒவ்வொரு நாளும் எனக்கு வயதாகி கொண்டே போகிறதென்பதை நான் உணருகிறேன். நான் செல்லட்டும், கர்த்தாவே; எனக்கு பெலத்தை தாரும்; இந்த மகத்தான சத்தியத்தை எல்லா இடத்திலும் சொல்ல எனக்கு உதவி செய்யும். நாங்கள் இன்னுமாக புரிந்து கொள்ள எங்களுக்கு நாளை மதியம் உதவி செய்யும். 70மேலும், அருமை தேவனே, இந்த மதிய வேளையில் இந்த சிறு ஜனக்கூட்டத்தை ஆசீர்வதியும். இன்றிரவு, சுகமளிக்கும் ஆராதனைக்காக இவர்கள் ஒன்று கூடுகையில், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஸ்திரீயும் ஒருவருக்கொருவர் சந்தித்து “இப்பொழுது இங்கே... இனிமேல் எந்த ஒரு சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை - வேண்டியதில்லை. அது எங்கிருந்து வருகிறதென்று இப்பொழுது நாம் புரிந்து கொண்டோம். அது பிசாசு என்று நாம் அறிந்து கொண்டோம். அவன் செல்லும் போது அவன் தேவனுடைய கட்டளையின் கீழ் வந்து தான் ஆகவேண்டும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவன் அப்படித்தான் செய்தாக வேண்டும். தேவன் அவ்விதமாகத்தான் கூறியிருக்கின்றார். அவன் விட்டு போய்த்தான் ஆக வேண்டும்'' என்று கூறி பேசிக் கொண்டிருக்கட்டும். அவர்கள் தாமே சந்தோஷமாய் களிகூர்ந்து கொண்டு, தங்கள் சுகமளித்தலை உரிமை கோரிக் கொண்டு வெளியே செல்லட்டும். அவர்களுடைய வழியில் இனிமேல் எதுவுமே எந்த காரியமும் நிற்காதிருப்பதாக, விசுவாசித்துக் கொண்டு அப்படியே செல்லட்டும். ஆகவே, தேவனே, இங்கேயிருக்கின்ற இந்த சிறு சபைதாமே, இந்த ஒத்துழைக்கின்ற சபைகள் தாமே, இந்த கூட்டத்திற்கு பிறகு ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொள்ளட்டும், கர்த்தாவே, அதுதாமே அதை பெற்றுக் கொள்ளட்டும், கர்த்தாவே, அது தாமே அதை நிரப்பிக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்திற்குள் நேராக நூற்றுக் கணக்கான ஆத்துமாக்கள் கொண்டு வரப்படட்டும். பிதாவே இதை அருளும், தேசங்கள் மற்றும் மற்ற இடங்களிலிருந்து வந்திருக்கின்ற அநேக ஆண்களும் பெண்களும் இந்த செய்தியை தங்களுடைய சபைகளுக்கு திரும்பக் கொண்டு சென்று, அவர்கள் தாமே ஒரு பழமை நாகரீக எழுப்புதலை கொண்டிருக்கட்டும். கர்த்தாவே இதை அருளும், இப்பொழுது எங்கள் பாவங்களை மன்னியும். உம்முடைய ஊழியக்காரர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 71நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், “இன்றைக்கு கூட்டத்தில் சகோதரன் பிரன்ஹாம், ஜெபத்தில் என்னை நினைவு கூறுவீர்கள்'' என்று கூறும் ஒரு பாவி இருக்கிறாரா? என்று நான் ஆச்சரியமுறுகிறேன். நீங்கள் - நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீரா? பாவியான நபர் யாராவது உள்ளனரா? என்னால்... ஸ்திரீயே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாராவது உள்ளனரா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள், நீங்கள், நீங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஆச்சரியமுறுகிறேன் நீங்கள்... இப்பொழுது, இது உங்களுக்குத் தான். பாருங்கள், நான் ஜனக்கூட்டத்திற்குள் செல்வதில் நம்பிக்கை கொள்வதில்லை. அவ்வாறு செய்யும் மற்றவர்களை நான் - நான் குறை கூறுவதில்லை. ஜனக்கூட்டத்திற்குள் சென்று யாராவது ஒருவரை இழுக்க முயற்சிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாருங்கள்? பிதாதாமே ஒருவனை இழுத்துக் கொள்ளாமல் எந்த ஒரு மனிதனும் வரமாட்டான். பாருங்கள்? அதுசரி. நீங்கள் அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவனை இழுக்கிறீர்கள். பாருங்கள்? ஆனால் தேவன் உங்கள் இருதயத்தை தட்டுவாரானால் உலகத்திலேயே நீங்கள் தான் மிக அதிகமான சிலாக்கியம் பெற்ற நபர் ஆவர். எத்தனை ஜனங்களிடம் பேசினேன் என்று உங்களுக்குத் தெரியாது...